இட்லிக்கு அரைக்கறீங்களா? அப்ப தோசை மாவில் இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க, வேற லெவலில் சத்தான இட்லி
சென்னை: அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவாக இட்லி திகழ்ந்து வருகிறது.. அதேசமயம், இட்லி சாப்பிடுவதால் எற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? உடலுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் என்னென்ன தெரியுமா?
1 இட்லியை எடுத்துக் கொண்டால், 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளதால், சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.. அதேசமயம், கொழுப்புச்சத்து இல்லாமல் இருப்பதால், அனைவருக்குமே ஏற்ற உணவாக கருதப்படுகிறது.
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதுடன், தசைகளை வலிமையடைய செய்கின்றன இட்லி.. ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு முக்கிய பங்கிருக்கிறது.. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தந்து, வயிற்றிலுள்ள புண்களையும் ஆற்றிவிடுகின்றன இந்த இட்லிகள்.. இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் அதிகமாகவே உள்ளது.. காரணம் இதிலுள்ள உளுந்தம் பருப்பு உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை தக்க வைக்க உதவும்.

கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் பெஸ்ட் சாய்ஸ்.. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.
நொதித்தல்: இட்லியை சாப்பிடும்போது, நம்முடைய உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன.. இட்லி மாவு புளிக்க வைத்து தயாரிப்பதால், நொதித்தல் செயல்முறை காரணமாக, புரோ பயாடிக்குகள் உருவாகின்றன... நம்முடைய குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இவைகள் மிகவும் தேவையானதாக இருக்கிறது.. உணவிலிருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவதற்கும் இந்த இட்லிகள் உதவுகின்றனவாம்.
ஆனால், வெறும் இட்லியையே, நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக மாற்றி கொண்டால் இன்னும் சிறப்பு என்கிறார்கள்.. அதாவது, அரிசிக்கு பதிலாக, சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தியும் இட்லி மாவு அரைக்கலாம்.. அந்தவகையில், கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து மாவு அரைத்து இட்லி வார்க்கலாம்...
பாசிபருப்பு: பாசிப்பருப்பு சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. உடல் எடையை குறைக்கவும் இந்த பாசிபயிறு பெரிதும் துணைபுரியும்..
நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை இட்லி சிறந்த உணவுதான் என்றாலும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை குறைத்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, புரோட்டீன், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள்: அதேபோல, பெரும்பாலும் டிபன்களுக்கு சாம்பார் போன்ற பருப்பு சேர்த்த உணவைகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக, பாசிப்பருப்பு, சோம்பு சேர்த்து சாம்பார் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்.
அரிசிக்கு மாற்றாக ரவா இட்லி, கேழ்வரகு இட்லி என சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிட்டால் இன்னும் நல்லது.. அரிசியை பயன்படுத்திதான் மாவு அரைக்க வேண்டுமானால், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும். அதேசமயம், சட்னிகளுக்கு பதிலாக, காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிட்டால் இன்னும் நிறைய சத்துக்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications