வாழை பூ.. இந்த பூவில் மறைந்துள்ள ஆச்சரியம் இதுதான்.. வீட்டில் குட்நியூஸ் வரும்.. சூப்பர் வாழைப்பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்ல, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் வாழைப்பூ நமக்கு உதவுகின்றன.. இந்த பூவின் வேறு பயன்கள் என்னென்ன தெரியுமா?

வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையது. அந்தவகையில், இந்த வாழைப்பூவில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன..

Amazing Health Benefits of Banana flower and Do you know Banana Flower is the Best Treatment for Kidney

புற்றுநோய்: தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை மொத்த ஆபத்துகளையும் நம்மிடம் நெருங்க விடாமல் செய்கிறது இந்த வாழைப்பூக்கள்.. பெண்களுக்கு இந்த பூக்களை, வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், ஹீமோகுளோபின் பிரச்சனையை இந்த வாழைப்பூக்கள் சரிசெய்வதுடன், ரத்த விருத்தியையும் அதிகரிக்க செய்கிறது.. சிகப்பு ரத்த அணுக்களை பெருக்கெடுக்க செய்யும்.

பாலூட்டும் தாய்மார்கள் இந்த வாழைப்பூவை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள்.. தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது தாய்ப்பால் அதிகம் சுரக்கும்... கர்ப்பப்பைக்கும் பலத்தை தரும்.. பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் ரத்தப்போக்கையும் குறைக்கும்...

மாதவிடாய்: மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு மற்றம் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்கள், இந்த பூவை வேக வைத்து சாப்பிட்டால் குணமாகலாம்.. அதேபோல, இந்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலில் புரொஜெஸ்டிரான் ஹார்மோனை அதிகரிக்க செய்து, மாதவிடாய் ரத்தப்போக்கினை குறைக்கிறதாம்.. இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்..

வாழைப்பூவில் வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன.. எனவே சருமத்தை காப்பதுடன், வயது முதிர்ச்சியையும் தள்ளிப்போடும் தன்மை இந்த வாழைப்பூக்களுக்கு உண்டு..

சிறுநீரகம் சிறப்பாக இயங்கவும், பலப்படவும், சிறுநீரக பிரச்சனைகள் தீரவும், சிறுநீரக கற்கள் வெளியேறவும், இந்த வாழைப்பூக்கள் மருந்தாகின்றன.. இந்த பூவின் குருத்துகளை, சாப்பிட்டு வந்தாலே, வலியுடன் கூடிய கிட்னி கற்கள் கரைந்துவிடுமாம்..

நிவாரணம்: வயிற்றுப்புண், வாய்ப்புண், இருப்பவர்கள், வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. நார்ச்சத்து அடங்கி உள்ளதால், மலச்சிக்கலை தீர்க்க அருமருந்தாகின்றன இந்த பூக்கள்.. புரோட்டீன் + நார்ச்சத்து உள்ளதால், உடல் எடை குறைக்க முயற்சிப்போருக்கு இந்த வாழைப்பூக்கள் கைகொடுத்து உதவுகின்றன..

வாழைத்தண்டு போலவே, துவர்ப்பு நிறைந்த இந்த வாழைப்பூக்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.. மேம்படுத்தப்பட்ட குளுகோஸை இந்த வாழைப்பூக்கள் வெளியேற்றுவதுடன், சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.. அதுமட்டுமல்லாமல், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.

கொழுப்புத்தன்மை: மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.. வாழைப்பூவை உணவாக 2 வாரங்கள் சாப்பிட்டு வந்தாலே, ரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து ரத்த ஓட்டம் சீரடையுமாம். முக்கியமாக, ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தை இந்த பூக்கள் சுத்தப்படுத்துகின்றன..

மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், செரியாமை, ரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இந்த வாழைப்பூக்களுக்கு உண்டு.. வைட்டமின் A நிறைந்துள்ளதால், வாழைப்பூவை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுவதில்லை.. விழிப்படலம், கருவிழி போன்றவற்றை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்புரை ஏற்படுவதையும் இந்த பூக்கள் தடுக்கின்றனவாம்.

வாழைப்பூக்கள்: மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யக்கூடியவை இந்த பூக்கள்.. ஆனால், வாழைப்பூவை வாழையில் இருந்து பறித்த, அடுத்த 2 நாட்களுக்குள்ளேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவைகளை உட்கொள்வது ஆரோக்கியமாகும்.

வாழைப்பூக்கள் இந்த அளவுக்கு பலன் தருவதால்தான், தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய், சீரம், கிரீம்களில் வாழைப்பூவின் சாறு முக்கிய மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+