இவங்கெல்லாம் கத்தரிக்காய் "தொடக்கூடாது".. யாருக்கெல்லாம் கத்தரிக்காய் அலர்ஜி? உடல்எடை குறைக்க கத்தரி
சென்னை: கத்தரிக்காயை வாரம் 2 நாளாவது சாப்பிட வேண்டுமாம்.. ஆனால், ஒருசிலர் மட்டும் இந்த கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.. யாரெல்லாம் தெரியுமா?
நிறைய புரோட்டீன்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, மாங்கனீசு, வைட்டமின் B6, A, C, B1, B2, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் நிறைந்தவைதான் கத்தரிக்காய்கள்.

உடலுக்கு ஊட்டம் தருகின்ற அளவுக்கு ஏராளமான வைட்டமின்கள் இந்த கத்தரிக்காயில் உள்ளன.. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால்தான், உடல் எடையை குறைக்க இந்த காயை உணவில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. காரணம், 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து உள்ளன.
உடல் எடை: ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.. ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தை குறைக்கிறது. இதனால், எடையும் கூடாமல் பாதுகாக்கிறது.
உஷ்ண தன்மை வாய்ந்த காய் என்பதால், சளி, இருமலை கட்டுப்படுத்துகிறது. உடல் சோர்வடைவதை தடுக்கிறது. இருமல் அதிகமாக இருந்தால், கத்தரிக்காய்களை சமைத்து சாப்பிடலாம்.
சரும பளபளப்பு: சருமத்தை மென்மையாக்கும் தன்மை இந்த கத்தரிக்காய்க்கு உண்டு.. காரணம், வைட்டமின் C, இரும்பு சத்து நிறைந்துள்ளதால், சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்குகிறது.. நரம்புகளுக்கும் பலம் கிடைக்கிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடிய சக்தி இந்த கத்தரிக்காய்களுக்கு உண்டு. இதனால் இதயத்தின் பலமும் அதிகரிக்கிறது. மாரடைப்பையும் தடுக்கிறது.
சருமத்துக்கு மட்டுமல்லாமல், தலைமுடி வளர்ச்சிக்கும் இந்த இரும்புச்சத்து நிறைந்த கத்தரிக்காய் உதவுகிறது..
முதல்கட்ட சிறுநீரக கற்களை கரைக்கக்கூடியது இந்த கத்தரிக்காய்..
நினைவாற்றல்: போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இந்த காயில் நினைவாற்றல் அதிகரிக்கும்.. மூளை செல்களையும் பாதுகாக்கும். கத்தரிக்காய்களை, பிஞ்சாக சாப்பிட வேண்டும்.. முற்றிய காய்களை அதிக அளவு சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.. ஆனால், உடல் வளர்ச்சிக்கு உதவுவது முற்றிய காய்கள்தான்.. ஏனென்றால், இவற்றில் வைட்டமின் A அதிக அளவில் இருக்கின்றன.
புற்றுநோய் வராமல் காக்கக்கூடிய தன்மை இந்த கத்தரிக்காய்களக்கு உண்டு.. இதிலுள்ள, பாலிபினால்கள் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. கட்டி வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்கிறது.
மலச்சிக்கல்: தொடர்ந்து கத்தரிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு மலச்சிக்கலும் ஏற்படுவதில்லை.. சர்க்கரை நோய்களும் நெருங்குவதில்லை.. டைப் 2 சர்க்கரை நோயை இந்த கத்தரிக்காய்கள் தடுக்கின்றன.. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.
கத்தரிக்காய் சிலருக்கு அலர்ஜியை தந்துவிடும்.. கத்தரிக்காயில் உள்ள புரோட்டீன்களும், அதிகமான சோலனைன் மற்றும் ஹிஸ்இடமின்களும் நிறைந்திருப்பதே இதற்கு காரணம். இதனால், ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு இடர்பாட்டை ஏற்படுத்துகிறது.. எனவேதான், கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, தலைசுற்றல், காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது.
அலர்ஜி: உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உஷ்ணத்தை தந்துவிடும் காய் என்பதால், அரிப்பை ஏற்படுத்திவிடும்.. இந்த புண்கள் ஆறுவதற்கும் அதிக நாள் ஆகிவிடும்.
அதேபோல, சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் கத்தரிக்காயை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது. இதிலுள்ள ஆக்ஸலேட்கள், சிறுநீரக கற்களை இன்னும் அதிகமாக்கிவிடும். கண் எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம். ரத்த சோகை உள்ளவர்களும் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications