பச்சை தேங்காய் பெஸ்ட்.. குழம்பில் தேங்காயை அரைத்து ஊற்றுகிறீர்களா? துருவல் போடறீங்களா? இது படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை தவிர்க்கவே முடியாது.. அப்படி என்ன சத்துக்கள் தேங்காய்களில் உள்ளன தெரியுமா? தேங்காய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், என பல சத்துக்கள் தேங்காய்களில் உள்ளன.. நம்முடைய உடலுக்கு தினசரி தேவைப்படும் இன்றியமையாத சத்துக்கள்தான் இவையெல்லாம்.

Amazing Health Benefits of Coconut and what are the Super Medicinal Uses for Coconut Flower

தேங்காய்கள்: தேங்காயில், "சேச்சுரட்டேடு" கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை என்பதால், கொழுப்புகள் நம்முடைய உடலில் தங்குவதில்லை என்பது மிக முக்கியமான விஷயம்..

அதனால், தேங்காய் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வருவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தேங்காயின் கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், சிறந்த உணவாக தேங்காய் திகழ்கிறது.

நார்ச்சத்துக்கள்: அடுத்ததாக, நார்ச்சத்துக்கள் தேங்காய்களில் அதிகம் உள்ளன.. இதுதான் ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் தடுக்கிறது.. நோய் தொற்றுகள் நம்மை அண்டவிடாமல் தடுத்து, அவைகளுக்கு எதிராக போராடுகிறது.. முதுமையை தள்ளி போட்டு, சரும ஆரோக்கியத்தை பேணிகாக்கிறது.. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் நீக்குகிறது.

ஆனால், தேங்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துவைத்து கொள்ள வேண்டும். சராசரியாக ஒருவர், ஒரு நாளைக்கு சுமார் 40 கிராம் தேங்காயை சமைக்காமல் சாப்பிடலாம்.. இதே அளவு தேங்காயை அரைத்து பால் எடுத்து, கொதிக்க வைக்கும்போதுதான் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.. அதிலும், தேங்காய் துருவல்களை அதிகம் உணவில் பயன்படுத்துகிறோம்.. இதற்கு ருசி அபாரம் என்றாலும், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.

கொலஸ்ட்ரால்: காரணம், தேங்காய் முதிர்ச்சியடைந்து உலர்ந்த கருவாக மாறும்போது, அதிலிருக்கும் சத்துக்களும் மாற்றம் பெறுகிறது.. இதனால், கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது... அதனால்தான், தேங்காய் துருவலை தவிர்த்து, தேங்காயாக சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.. கொலஸ்ட்ராலும் தவிர்க்கப்படும் என்கிறார்கள்.

அதுவும் இல்லாமல், தேங்காய் பாலை பிரித்தெடுக்கும்போது, அதிலிருக்கும் நார்ச்சத்தும் வடிகட்டப்படுகிறது.. வெறுமனே கொலஸ்ட்ராலை எடுத்து, உணவில் பயன்படுத்துகிறோம்.. இந்த தேங்காய்ப்பால், வயிற்று புண், வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது.. அதனால்தான், அல்சர் நோயாளிகளுக்கு தேங்காய்ப் பால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது..

தேங்காய்ப்பூக்கள்: எனினும், தேங்காயை மென்று சாப்பிடுவது கூடுதல் பலன் தருகிறதாம். நிறைவுற்ற கொழுப்பு அமிலம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள், மட்டும் தேங்காயை தவிர்க்க வேண்டும். தேங்காயைவிட தேங்காய்ப்பூவில் நிறைய சத்துக்கள் உள்ளதாம்.. தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூக்களாக மாறுகின்றன..

தேங்காய்ப்பூவில் காப்பர், இரும்புச்சத்து, தாமிரம் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளதால், ரத்தத்தின் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.. கர்ப்பமான பெண்களும், பாலூட்டும் பெண்களுக்கும், தேங்காய்பூக்களை சாப்பிடும்போது, பால் அதிகமாக சுரக்கும்.. கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும் நீங்கும்..

இன்சுலின்: சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், பசியும், சோர்வும் அதிகமாக இருக்கும்.. இவர்கள் இந்த தேங்காய் பூக்களை அளவுடன் சாப்பிடலாம். இதனால், கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்..

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. ஜீரண சக்தியும் அதிகமாகும். இதயத்தில் சேரும் கொழுப்புக்களை கரைய இந்த பூக்கள் உதவுகின்றன..

சூப்பர் உணவு: அதேபோல, தைராய்டு சுரப்பியும் சீராகிறது.. தேங்காய் பூ தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புற்று நோய் வராமல் காக்கப்படுகிறது.. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், தேங்காய்பூக்களை அதிகம் சாப்பிடலாம்.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த தேங்காய் மற்றும் தேங்காய் பூக்களை சாப்பிடுவது சிறந்தது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+