இடுப்பு கொழுப்பு கரையணுமா? காலையில் "இது" ட்ரை பண்ணி பாருங்க.. அப்பப்போ இந்த தண்ணி குடித்தாலே போதும்
சென்னை: முறையான உடற்பயிற்சியும், சத்தான காய்கறிகளும் இருந்தாலே உடல் ஆரோக்கியமாகிவிடும்.. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு கை கொடுப்பதும் இந்த வியூகம்தான்.. இதனுடன் சிலவகையான உணவு முறைகளையும் கடைப்பிடித்தாலே, உடல் எடை குறைய தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது முக்கியமாகிறது.. குறிப்பாக, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், காலை உணவை தவிர்க்கக்கூடாது..

காலை உணவு: காலை உணவுதான் நம்முடைய அன்றைய நாளின் முதல் உணவு.. நாளெல்லாம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதும் இந்த காலை உணவுதான்.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவில் என்ன சாப்பிடலாம் தெரியுமா?
காலை உணவில் புரோட்டீன் உணவு அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டுமாம்.. கோழியின் மார்பகம், சிக்கன், மீன்களில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.
முக்கியமாக, காலை உணவாக முட்டையை எடுத்து கொள்வது பெருத்த நன்மையை தரும். முட்டையில் புரோட்டீன் மட்டுமல்லாமல் கலோரிகள் குறைந்த அளவே உள்ளன. இதனால், நம்முடைய தசைகள் வலிமை அடையும்.. உடல் உறுப்புகளும் இயல்பாக செயல்பட உதவும்.. முட்டையிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நமக்கு உடல் வலிமையையும், ஆற்றலையும் தருகிறது.
கொழுப்புச்சத்து: முட்டையில் உள்ளது நல்ல கொழுப்புச்சத்து என்பதால், தாராளமாக சாப்பிடலாம்.. ஆனால், பச்சையாக சாப்பிடக்கூடாது.. காரணம் அதில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கலாம்.. எனவே, ஆவியில் வேக வைக்கப்பட்ட முட்டையே சிறந்தது என்கிறார்கள். ஒருநாளைக்கு 1 அல்லது 2 முட்டை சாப்பிடலாம்.
அல்லது முட்டைக்கு பதிலாக அவல் சேர்த்து கொள்ளலாம். குறைந்த கலோரி உள்ளதுடன், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இந்த அவலில் உள்ளது. எனவே காய்கறிகளை சேர்த்து, அவல் உப்புமா செய்து சாப்பிட்டால் காலை உணவு சிறப்பாக இருக்கும். தேவைப்பட்டால் பருப்பு, & தயிர் இவைகளையும் காலை உணவில் சேர்த்து கொள்ளலாம்
பயத்தம்பருப்பு: அதிலும் பயத்தம்பருப்பை தாராளமாக சேர்க்கலாம்.. இந்த பருப்பில் ஏராளமான புரதங்கள் நிறைந்துள்ளன. கலோரிகளும் குறைவு.. எனவே, பயத்தம்பருப்புடன் நிறைய காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
அதேபோல, எப்போதுமே தண்ணீர் குடிக்கும்போது வெறும் தண்ணீருக்கு பதிலாக சீரகம் கலந்த தண்ணீரை குடித்தால் இன்னும் சிறப்பு.. இந்த சீரகம் வயிற்றை குளிர்விக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடலிலுள்ள நச்சுக்களை நீக்குகிறது.. எனவே, சீரகத்தண்ணீரை குடித்து கொண்டே இருக்கலாம்.
புரோக்கோலி டீ: ஒருவேளை, டீ குடிக்க வேண்டும் என்ற நினைத்தால் கொய்யா இலைகளில் டீ தயாரித்து குடிக்கலாம்.. அல்லது ப்ராக்கோலியில் டீ தயாரித்து குடிக்கலாம்.. இந்த புரோக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு.. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே விற்பதால் அதை பயன்படுத்தி டீ தயாரித்து குடிக்கலாம்
வீட்டிலேயே இந்த பொடியை நாம் தயார் செய்யலாம்.. ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொண்டால் போதும். டீ தூளுக்கு பதிலாக, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தாலே எடை மெல்ல குறைய துவங்குமாம்.
குக்குலு: அதேபோல, அஸ்வகந்தாவையும் உடல் எடை இழப்புக்காக தாராளமாக பயன்படுத்தலாம்.. இந்த மூலிகையில், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலிப்பு எதிர்ப்பு பண்புகள் நிரம்பி உள்ளன. குக்குலு பவுடரையும் மருந்தாக பயன்படுத்தலாம.. உடலிலுள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது என்பதால், குக்குலுவை எடை குறைப்பிற்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். எனவே, மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த மருந்துகளையும் எடுத்து கொள்ளலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications