வெறும் வயிற்றில் இந்த 2 போதுமே.. கல்லீரலுக்கு பெஸ்ட் இதுதான்.. இதய நலன் காக்கும் சூப்பர் டிரிங்க்
சென்னை: கல்லீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல்வேறு உணவுகள் நமக்கு பேருதவியாக இருக்கிறது என்றாலும், மஞ்சள் + வெல்லம் இந்த இரண்டும் சேர்ந்த கலவையை சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்குமாம்.
உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்கிறது கல்லீரல்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

கல்லீரல் பாதுகாப்பு: கல்லீரலை பாதுகாக்க வேண்டுமானால், கல்லீரலுக்கு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்துவிட்டு, கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய நெல்லிக்காய் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
முக்கியமாக, மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை, இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவைகளை தவிர்த்தாலே கல்லீரலுக்கு பெரிய பாதிப்பு வராது.
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் வகை பழங்களும், காய்கறிகளும், நன்மைகளை தரக்கூடியது என்றாலும், மஞ்சளும், வெல்லமும் சேர்த்து சாப்பிடுவது மேலும் கல்லீரலை பலமாகும் என்கிறார்கள்.. காரணம், மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது.. இதனால், வீக்கத்தை குறைக்கிறது. அதேபோ, வெல்லமும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், இவை இரண்டும் சேரும்போது நன்மை கிடைக்கிறது.
செரிமான நொதிகளின் உற்பத்தியை மஞ்சள் தூண்டுகிறது.. இதே தன்மைதான் வெல்லத்திலும் உள்ளது.. எனவே, இவை இரண்டும் சேரும்போது, செரிமான செயல்முறை மேம்படும்.. வளர்சிதை மாற்றமும் ஏற்படும்.. நச்சுக்கள், கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியம் தழைக்கும்..
பச்சை மஞ்சள்: மஞ்சள் + வெல்லம் இவை இரண்டுமே, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்த உவுவதுடன், நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் தூண்டுகோலாக உள்ளது.. இரண்டும் சேர்ந்து தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பை தருகின்றன..
அதேபோல, இரண்டுமே சருமத்துக்கும் பாதுகாப்பை தருகின்றன. காரணம், வெல்லத்திலும், மஞ்சளிலும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைய உள்ளன. இதனால் சுருக்கம் வராமல் தடுக்கப்பட்டு, பொலிவான சருமம் கிடைக்கிறது... மூட்டு வலி, முழங்கால் வலி, முழங்கால் வீக்கம் போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதய நோய் அபாயங்களும் வெகுவாக குறைகிறது.
எப்படி சாப்பிடுவது : வெறும் வயிற்றில் இதனை சாப்பிட வேண்டும்.. பச்சை மஞ்சளை, வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிடலாம். . அல்லது சூடான பாலில், மஞ்சள், வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடலில் வேறு ஏதாவது உங்களுக்கு தொந்தரவு இருந்தாலோ, மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது ஆரோக்கியமானது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications