வளர்வது குப்பையில்! பயன்களோ கோபுரத்தை விட பெரிசு! பாம்பு விஷத்தையே முறிக்கும் மேஜிக் இலை!
சென்னை: பெயர்தான் குப்பைமேனி... ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும். இதை அறிந்த பலர் தற்போது வீடுகளில் வளர்த்து வருகிறார்கள்.
சித்தர் நமக்கு எத்தனையோ மூலிகைகளை கொடுத்துவிட்டு கண்ணுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. அவர்கள் கொடுத்த மூலிகைகளின் பலன்களை நம் மூதாதையர்கள் பெற்றார்கள். ஆனால் இன்று நாம் ஒரு ஜலதோஷத்திற்கு கூட மருத்துவரை நாடுகிறோம்.

அந்த வகையில் மூலிகைளின் அரசன் அருகம்புல்... பிள்ளையாருக்கு உகந்த புல் இது. இதிலும் ஏராளமான சத்துகளும் மருத்துவ பலன்களும் கொட்டி கிடக்கின்றன. அருகம்புல் தெய்வத்தின் சன்னதியில் இருக்கிறது. அதே போல் பல மருத்துவ பலன்களை வாரி வழங்குகிறது குப்பையில் இருக்கும் ஒரு செடி.
அதன் பெயர் குப்பை மேனி என்பதாகும். இது பெரும்பாலும் குப்பைகளில் வளரும். புதர்களில் மண்டி கிடக்கும். தானாக வளரக் கூடியது. ஆனால் இது சாதாரண செடி இல்லை.. மேனியை பளபளப்பாகும் குணம் இந்த குப்பை மேனிக்கு உண்டு. அனைவருக்கும் கேட்காமலேயே பலனை அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்டதால்தான் என்னவோ இவை தானாகவே வளர்கின்றன.
சருமத்தில் உண்டாகும் நோய்களை நீக்கும். உடலில் வியர்க்குரு, அரிப்பு, படை, உள்ளிட்ட தோல் நோய்கள், கண்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், பூச்சுக்கடி உள்ளிட்டவைகளுக்கு இதன் சாற்றை உப்புடன் கலந்து போட பலன் அளிக்கும். படர்தாமரை பிரச்சினைக்கும் குப்பைமேனியுடன் உப்பை தடவி வர நோயின் தீவிரம் குறையும். படர்தாமரைக்கு நல்ல முடிவு கட்டலாம்.
சளியை இளக்கி வெளியேற்றும் குணம் குப்பைமேனிக்கு உண்டு. இந்த இலையின் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும் இருமல் காணாமல் போய்விடும். தலை வலியா? குப்பைமேனியை அரைத்து சாற்றை எடுத்து நெற்றியில் பற்று போட வேண்டும். உடனே தலைவலி சிட்டாட்டம் பறந்து போய்விடும்.

குப்பைமேனி இலையை சாறு பிழிந்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு சுடுநீரில் கலந்து கொடுத்தால் மலத்தை இளக்கும். வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்துவிடும். உடல் வலியால் அவதிப்படுவோர் குப்பை மேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் வெளிப்பூச்சாக தடவ வேண்டும்.
பாம்பு கடிக்கு விஷ முறிவாக இது பயன்படுகிறது. இதைத்தான் இருளர் சமூகத்தினர் செய்து விஷத்தை முறித்து வருகிறார்கள். அது போல் சளி, தொண்டை வலிக்கு குப்பை மேனி சாற்றுடன் சுண்ணாம்பு கலந்து பூசினால் தொண்டை வலி குறையும். சளியும் கட்டுப்படும். எனவே இந்த மூலிகையை பார்த்தால் குப்பை என நினைக்கால் அதன் அருமை பெருமைகளை பயன்படுத்தி வருங்கால சந்ததிக்கும் தெரிவியுங்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications