ஆபாச போட்டோஸ்.. 100 கோடி கொடுத்தாலும் பண்ணவே மாட்டேன்! ஐஸ்வர்யா லட்சுமி ஆதங்கம்
சென்னை: சமீபகாலமாக நடிகைகளுக்கு ரசிகர்களுடன் நேரடியாக பேசும் பாலமாக சோசியல் மீடியாக்கள் இருந்து வருகிறது. ஆனால் அதே சோசியல் மீடியாக்கள் இன்று பல நடிகைகளுக்கு மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் காரணமாக மாறிவிட்டதாக தொடர்ந்து பலரும் கூறி வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது வேதனையை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது சோசியல் மீடியாவை விட்டு விலகியதற்கான காரணத்தை பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்.
அதில் ஐஸ்வர் லட்சுமி பேசும்போது, என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாகவும் தரகுறைவான வகைகளும் சமூக வலைத்தளத்தில் பரப்பினார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. யாராவது எனக்கு 100 கோடி கொடுத்தாலும் நான் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரவே மாட்டேன். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எல்லா சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகிய பிறகு தான் எனக்கு உண்மையான மன அமைதி கிடைத்தது என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி
இந்த ஒரு கருத்து சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. பலரும் ஒரு நடிகைக்கு ரசிகர்களின் அன்பு முக்கியம் ஆனால் அதைவிட அவருடைய மனநிலை தான் முக்கியம், பணம் இருந்தாலும் மன நிம்மதி இல்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்பதைத்தான் லட்சுமி சொல்லி இருக்கிறார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் பிரபலங்களின் புகைப்படங்களை அனுமதி இன்றி மார்ஃபிங் செய்து ஆபாசமாக மாற்றி பரப்பும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நடிகைகள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும், ரசிகர்களும் மனவேதனை அடைந்து வருகின்றனர்.
நடிகைகளின் மார்பிங் போட்டோஸ்
சைபர் கிரைம் போலீசார் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தாலும் பேக் அக்கவுண்ட் மூலம் மீண்டும் மீண்டும் இதே செயல்கள் தொடர்வது பலருக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சோசியல் மீடியாவை விட்டு விலகிய பிறகுதான் நான் நிம்மதியாக இருக்கேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி சொன்ன வார்த்தை பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமியின் ஆரம்ப காலம்
கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் வந்தவர். மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்தவர் பின்னர் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் ஜகமே தந்திரம், கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அதன் பிறகு பலமொழிகளில் பிஸியாக நடித்து வரும் அவர் கதாநாயகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார்.

ரசிகர்கள் கருத்து
சமீபத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பால் பாராட்டுகளை பெற்றுக் கொண்டு இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சோசியல் மீடியாவால் ஏற்பட்ட மன உளைச்சலை பற்றி இப்போது பேசியிருக்கிறார். பிரபலங்கள் பொதுவெளியில் இருப்பதால் அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, உணர்வுகள் இருக்கிறது என்பதை பலர் மறந்து வடக்கூடாது என்று ரசிகர்கள் அறிவுரை சொல்லி வருகின்றனர்.
ராதா மகளா இது? “கோ” பட நடிகை வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. கணவருடன் சந்தோஷத்தை பகிர்ந்த கார்த்திகா
இன்னும் சிலர் லைக்ஸ் வியூஸ் வாங்குவதற்காக ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றுவது எந்த விதத்திலும் நியாயமில்லை இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
