5,000 போலீஸ்.. களமிறக்கப்பட்ட வஜ்ரா.. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தால் உச்சக்கட்ட பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்றைய தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முற்றுகையிடக் கரப்பான் பூச்சி கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5000+ போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பீரங்கிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், போராட்ட களத்திற்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் சில மெட்ரோ நிலையங்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியை கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நேற்றிரவு முதலே பல நூறு பேர் ஜந்தர் மந்தரில் குவிந்து வருகிறார்கள்.

Cockroach Janata Party India politics

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை

இதையடுத்து டெல்லி முழுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் உளவுத்துறையுடன் இணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் எத்தனை பேர் தங்கியுள்ளனர், எத்தனை பேர் புதிதாக வருகிறார்கள் என்பது குறித்து டெல்லி போலீசார் மற்றும் உளவுத்துறையினர் மூத்த அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்களாம். அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது..

இன்று அதிகாலை 4 மணி முதலே டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 5,000க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பெண்கள் பாதுகாப்புப் படையினர் உட்பட மத்திய ஆயுத போலீஸ் படையின் 25க்கும் மேற்பட்ட படைப்பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லியை 15 தனித்தனி பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனர். போராட்டத்தின் போது வன்முறை, தீ வைப்பு, பொதுச் சொத்துகள் சேதப்படுத்துதல் உள்ளிட்ட எந்த எந்தவொரு சம்பமும் நடக்கக்கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

விஜய் சவுக், நாடாளுமன்ற சாலை, பிரதமர் இல்லம், சேவா தீர்த்தா, செல்பி பாயிண்ட், டிரான்ஸ்போர்ட் பவன், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு பகுதிகளில் எந்தவிதமான போராட்டம், பேரணி அல்லது பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என போலீசார் அறிவித்துள்ளனர். போராட்டங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீர் பீரங்கிகள் உள்ளிட்டவையும் களமிறக்கப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப்படையினரும், கூடுதல் பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி போலீஸ்

டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழ்நிலையைப் பொறுத்து சில மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அவசரநிலையை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரப்பான் பூச்சி கட்சி

இது ஒரு பக்கம் இருக்க போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீஸ் முயல்வதாக கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஜந்தர் மந்தர் அருகே கற்கள் இருக்கும் லாரி வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், மக்கள் போராட்ட களத்திற்கு வருவதை தடுக்க ஜன்பத் மற்றும் ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையங்களை பாதுகாப்பு படை மூடியுள்ளதாகவும் விமர்சித்துள்ளது.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட நிலையில், கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் திப்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். வன்முறைக்கு எந்தவொரு இடமும் தராமல், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அமைதியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்பதால் இதில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+