தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்குமா? முடிவு என்ன? டிஆர்பாலு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ள நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக கொண்டு வர நினைக்கிறது. எனவே இந்த மசோதாவை திமுக ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுக எம்பிக்கள் டிஆர் பாலு இது பற்றி விரிவாக கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் இந்த கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் இரு அவைகளிலும் முக்கிய பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதே நேரத்தில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு வியூகம் வகுத்து வருகிறது.

DMK support the delimitation bill What is the decision TR Baalu explains

என்.டி.ஏ கூட்டணி பலம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் முறியடித்தன. இந்த மசோதக்கள் அரசியல் அமைப்பு திருத்த மசோதாக்கள் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். இதனால் அந்த பெரும்பான்மையை எட்ட முடியாதால் மசோதா முறியடிக்கப்படது. ஆனால் தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறியுள்ளது.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக 20 எம்பிக்கள் போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிராவிலும் உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவினர். இப்படி மாறிய எம்பிக்களால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.

திமுக டிஆர் பாலு பேட்டி

திமுக கையில் தற்போது துருப்புச்சீட்டு வந்துள்ள நிலையில், திமுக எடுக்க போகும் முடிவு என்ன என்பது மொத்த தேசமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோரிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு திமுக எம்பி டிஆர் பாலு கூறியதாவது:-

உடனே கொண்டு வர வேண்டும்

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை என்பது எந்த அடிப்படையில் அமைய போகிறது என்பது பற்றிய விவரங்களை மத்திய அரசு பகிரவில்லை. வரைவு அறிக்கையும் தரவில்லை. அதனை பெற்றால்தான் நாங்கள் கருத்து கூற முடியும். தொகுதிகள் எண்ணிக்கை 25 சதவிதம் முதல் 50 சதவீதம் அதிகரிக்க போகிறது என்று பரவும் தகவல் ஊடகங்களில் மட்டுமே வெளியாகிக்கொண்டு இருக்கிறது.

அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. மசோதா வரைவை பார்த்த பிறகு தெளிவாக சொல்கிறோம். மேகதாது விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்ப உள்ளோம். காவிரியை போல மேகதாது அணை விவகாரத்திலும் ஒரு நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்துவோம்.

மகளிர் இட ஒதுக்கீடு இரு அவைகளிலும் வேண்டும் என்று விரும்புகிறோம். உடனே கொண்டு வர வேண்டும். அதனை திமுக ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளோம்.. உயர்கல்வி மசோதாவை பொறுத்தவரை வரைவு அறிக்கையை பார்த்த பிறகே அது பற்றி பேசுவோம்' என்று கூறினார்.

மசோதா நிறைவேற்ற எண்ணிக்கை உள்ளதா?

* மொத்த எம்பிக்கள் 540
* பெரும்பான்மைக்கு 360

* திமுக வெளிநடப்பு செய்தால் மொத்த எண்ணிக்கை 518 ஆக குறையும். 518 எம்பிக்கள் இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 345 தேவை. பாஜகவிடம் 341 (உத்தேசமானது) ஆதரவு உள்ளது. ஒருவேளை திமுக எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்தாலும், 4 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதால் மசோதா தோல்வி அடையும்.

* ஆனால் சமாஜ்வாடி எம்பிக்கள் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. மசோதாவை பார்த்த பிறகு முடிவு செய்வோம் என்று சமாஜ்வாடி கூறியுள்ளது. சமாஜ்வாடி ஆதரவு அளித்தால் திமுக ஆதரவு இல்லாமலயே மசோதா நிறைவேறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+