மாப்பிள்ளைச் சம்பா அரிசி.. ஆண்களின் சூப்பர் உணவு.. யாரெல்லாம் மாப்பிள்ளை சம்பா அரிசியை தவிர்க்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு ரத்தசோகையை விரட்டியடித்து, ஆண்களுக்கு பல்வேறு சத்துக்களை அள்ளி தரக்கூடியது மாப்பிள்ளைச் சம்பா.. இந்த அரிசியால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? மாப்பிள்ளை சம்பாவை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

தன்னுடைய உடல் திறனை நிரூபிக்கும் வீரனுக்கு மட்டுமே, தங்களது பெண்ணை திருமணம் செய்துதரும் வழக்கம், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்தது.. அதனால்தான், இதற்கு "மாப்பிள்ளை சம்பா" என்று பெயர் வந்ததாம்.

Mappilai Samba rice Health

சிவப்பு நிறம்: பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் அதிகமாக உள்ளன.... இரும்புச்சத்து, துத்தநாகம் சற்று கூடுதலாகவே உள்ளதால், ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களுக்கு கை கொடுக்கிறது.. இதனால் ரத்த சோகை பிரச்சனையை எளிதாக விரட்டியடிக்கலாம்.

அஜீரணம் உள்ளவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நார்ச்சத்து மிகுந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன், வயிற்றுப்புண்களும் ஆறிவிடும். நமது உடலிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தமும் சீராகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது சக்தி இந்த அரிசிக்கு உண்டு.. இந்த அரிசியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது... அதுமட்டுமல்ல, இதிலுள்ள துத்தநாகம், உடலிலுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது.

உடம்பில் சோர்வை முழுமையாக நீக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது.. நரம்புகளுக்கும் வலிமையை தருகிறது. எலும்புகளுக்கு உறுதியை தரக்கூடியது.. இதிலுள்ள நார்ச்சத்துக்கள், புற்று நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கின்றன.. குறிப்பாக பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளதால், புற்றுநோயின் அபாயத்தை குறைக்க செய்கின்றன.

பலம் பெற கஞ்சி: இளம்வயது ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட தருவதால், உடலில் வலிமை கூடும்.. தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் வலுவடைகிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை, ஆண்கள் தினமும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தாலே, உடலில் பலம் தெரியும்..

ஆண்மை கோளாறுகளை போக்கக்கூடிய இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து அதில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் நீராகாரமாக குடித்தாலும், அவ்வளவும் குளிர்ச்சியும், சத்துக்களையும் தரக்கூடியது.

மலட்டுத்தன்மை: பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும். இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.. இதனால் நீரிழிவு கட்டுக்குள் வருவதுடன், நரம்புகளுக்கும் பலம் கிடைக்க செய்கிறது..

இந்த அரிசியை சாதமாக வடிக்கலாம்.. ஆனால், சமைப்பதற்கு முன்பு 2 மணி நேரமாவது ஊறவைத்து சமைக்க வேண்டும் எனினும், சாதத்தைவிட, இட்லி, தோசை மாவாகவும் அரைக்கலாம்.. பொங்கல், புட்டு, கொழுக்கட்டைகளும் செய்யலாம்.. அல்லது வெறுமனே சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்த்து குடித்து வந்தால் ருசியாக இருக்கும்.. இதனால், வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண்களும் குணமாகும். குழந்தைகளுக்கு கஞ்சி, புட்டு, கொழுக்கட்டை செய்து தந்தால், எலும்புகள் வலிமையடையும். பற்களும் உறுதிபெறும்.

தவிர்க்கலாம்: பல நன்மைகள் இருந்தாலும், அடிக்கடி இந்த அரிசியை அதிகமாக சாப்பிடும்போது, சிலருக்கு தலையில் அரிப்பு, வீக்கம், முடி உதிர்தல், சுவாச பிரச்சனை போன்றவை வரலாம்.. சிலவகையான மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஒரு பூஞ்சை நச்சு, சிட்ரினின் என்ற வேதிப்பொருள் இருக்கலாம்.. இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்துமாம்.. எனவே, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கை குழந்தைகள், வயதானவர்கள் இந்த அரிசியை சாப்பிடும் முன்பு, டாக்டரிடம் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

இந்த அரிசியானது குளுகோஸின் அளவை குறைக்க செய்யும் என்பதால், நீரிழிவு நோயாளிகளும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+