ஆட்டுக்கறி எடுத்தால் இப்படி இருக்கணும்.. மட்டனுடன் இதை மட்டும் சாப்பிட்டுடாதீங்க.. செம ஹெல்த் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மட்டன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? இதுகுறித்து உணவு நிபுணர்கள் சொல்வதென்ன?

எப்போதுமே ஆட்டுக்கறி வாங்கும்போது சில விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும்.. நல்ல ஆரோக்கியமான ஆடுகளாக இருந்தால், அவை வெட்டப்படும்போதே உடலில் ரத்தம் துளிகூட தங்காமல் உடனே வடிந்துவிடும்.

mutton honey health

எப்படி வாங்குவது: ஆனால், ஆடுகள் நோய் தாக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது உடலில் பாதிப்பு இருந்தாலோ, வெட்டிய அந்த ஆட்டின் உடலில் ரத்தம் ஆங்காங்கே தேங்கியிருக்குமாம்.. இதுவே ஆடு இறந்ததும் அறுத்ததாக இருந்தால், ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். எனவே, இந்த ரத்தம் படிந்திருப்பதை வைத்தே ஆடுகளை தேர்ந்தெடுக்கலாம்.

ஒரே பருவத்தில் உள்ள 2 ஆடுகள் வெட்டப்பட்டால், ருசியுள்ள பெட்டை ஆட்டின் கறியையே தேர்ந்தெடுக்கலாம். அதேபோல, மட்டனில் தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும்.. காரணம், இந்த தோல் பகுதிகளில்தான், அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதுதான், இதய கோளாறுகளுக்கும் காரணமாகின்றன. ஆடுகளை வெட்டி, 5 மணி நேரத்திற்குள் வாங்கிவிட வேண்டுமாம். நேரம் ஆக ஆக, இறந்துபோன ஆடுகளில் கிருமிகள் வந்து சேர்ந்துவிடுமாம்.

ஆட்டுக்கறி: எப்போதும் மட்டன் வாங்கும்போது, ஆட்டுக்கறியை விரல்களால் தொட்டு பார்க்க வேண்டும். லேசாக கறியில் விரலை வைத்து அழுத்தி பார்க்க வேண்டும். பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே அந்த கறி வந்தால், அது நல்ல கறியாகும். ஒருவேளை, கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது.

ஆடுகளை அறுத்து நீண்ட நேரம் தொங்கவிடும்போதுதான், அதன் தசைப்பகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகிவிடுகிறது.. ஒருவேளை, அதுபோன்ற மட்டனை வாங்க நேர்ந்தாலும், காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணிநேரம் வெளியே வைத்திருந்துவிட்டு, அதற்கு பிறகே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

மட்டன்: ஆனால், மட்டன் சாப்பிட்டதுமே, ஒருசில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன்படி, மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல உபாதைகள் வரலாம்.

அதேபோல, மட்டனை சாப்பிட்டதுமே, தேன் சாப்பிடக்கூடாது... மட்டன் சாப்பிட பிறகு உடனே தேன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும்.. அதனால், மட்டனை சாப்பிட்டவுடன் தேன் சாப்பிடக்கூடாது... அதுமட்டுமல்ல, இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இதயம் மற்றும் சிறுநீரகம் நேரடியாக பாதிக்கப்படலாம் என்கிறார்கள்.. மட்டன், தேன் ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது இதயம் மற்றும் சிறுநீரகம் நேரடியாக பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

டீ குடிப்பது நல்லதா: அதேபோல, சிலர் மட்டன் சாப்பிடதும் டீ குடிப்பார்கள்.. இதுவும் நல்லதுகிடையாது.. அஜீரணம், நெஞ்செரிச்சலை உண்டுபண்ணிவிடும்.. மட்டன், சிக்கன் என எந்த இறைச்சி சாப்பிட்டடாலும், உடனே தூங்க கூடாது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+