"நுங்கு நுங்கு".. அடடே, இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. இதுல இவ்வளவு இருக்கா.. பெண்களே விட்றாதீங்க
சென்னை: நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களுக்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம்.
கோடை காலம் துவங்கிவிட்டது.. பள்ளிகள் விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது.. ஆனால், எங்கு பார்த்தாலும் வெயில் கொளுத்தியெடுத்தி வருகிறது..
இதனால், உடலுக்கு குளுமைதரும் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அட்வைஸ்களை தந்து வருகிறார்கள்.. இளநீர், மோர், தர்பூசணி, கரும்பு சாறு கடைகளும் ஆங்காங்கே முளைத்துவிட்டன.

நுங்கு பயன்பாடுகள்: இதில், நுங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.. பனைமரத்திலிருந்து பெறப்படும் பனைவெல்லம், பனங்கற்கண்டு பனங்கிழங்கு, பதநீர் வரிசையில், இந்த நுங்குவும் மிக மிக முக்கியமானதாகவும், மருத்துவகுணங்களை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், தாகம் அடங்கவில்லை என்பவர்கள், நுங்கு சாப்பிட்டால் தாகம் நிச்சயம் தணியும்.. நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசிய தாதுக்கள் உள்ளதால் இவை நீரிழிப்பு அபாயத்திலிருந்து காக்கிறது.
அதனால், நுங்கு சாப்பிட்டு வந்தால் தாகம் தணிவதோடு நீர்ச்சத்து இழப்பு அபாயத்தையும் தடுத்து நிறுத்துகிறது.. மேலும், உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது... அதேபோல, வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சந்திக்க நேருவோருக்கு நுங்கு அருமருந்தாகிறது.. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும்..
குடல் இயக்கம்: குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது நுங்கு.. இது எல்லாவற்றிற்கும் மேலாக எடை இழப்பு முயற்சிக்கும் நுங்கு உதவுகிறதாம்.. நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்டநேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்..

மேலும், இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது.. அத்துடன், வெள்ளைப்படுதல் காரணமாக சிரமங்களை சந்திக்கும் பெண்களுக்கும், சரும பாதுகாப்புக்கும் நுங்கு சிறந்த அருமருந்தாக உள்ளதால், நுங்குவை தவிர்க்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். மார்பக புற்றுநோய்க்கு அதிக அளவில் பெண்கள் ஆளாகி வருவதாக ஆய்வுகள் வெளியாகி பகீரை கிளப்பி வருகின்றன..
மருத்துவ குணம்: இதற்கும் நுங்குவின் மருத்துவ குணம் உதவுகிறதாம். அதாவது, மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறதாம்.. இந்த ஆன் தோசயனின் என்ற வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாகவும், அதனால், பெண்கள் அதிக அளவு நுங்கு சாப்பிட்டால் போதிய பலனை அடைய முடியும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications