பனங்கிழங்கு.. ஒரே ஆச்சரியம்.. சர்க்கரை வள்ளிக்கிழங்கை, சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? சீக்ரெட் பாருங்க
சென்னை: பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளை, கிழங்குகள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. உண்மையை சொல்லப்போனால் எல்லா கிழங்குகளுமே கெடுதல் கிடையாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கிழங்குகளும் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்.
முதலில் பனங்கிழங்கை எடுத்துக் கொண்டால், நார்ச்சத்து நிறைந்தது.. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது.. பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, மிக குறைவான அளவில் இந்த கிழங்கை சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதில் மிக முக்கியமானதாகும்.. பெயரை கேட்டதுமே சாப்பிடாமல் ஒதுக்கியும் விடுகிறோம். ஆனால், இந்த கிழங்கில், தித்திப்பு சுவை தரும் மாவுப்பொருள் மட்டுமல்ல, வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள B-6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது...
எதிர்ப்பு மண்டலம்: இதிலுள்ள விட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது... அத்துடன் எலும்புகளும் வலுவாகின்றன.. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இந்த கிழங்கில் இனிப்பு நிறைந்திருந்தாலும், அது இயற்கையானது.. எனவே, ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.
சர்க்கரை நோயாளிகள்: சேப்பங்கிழங்கும் நல்லதுதான் என்றாலும், இந்த கிழங்கின் இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது.. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை, சர்க்கரை நோய் உள்ள எலிகளுக்கு தந்து பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்திருப்பது ஆய்வில் உறுதியானதாம்.
இந்த இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்கிறார்கள்.. நார்ச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு இலையின் சாறை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாதாம்..
கிழங்குகள்: கேரட், பீட்ரூட் இரண்டையுமே சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாது.. இந்த இரண்டிலுமே கிளைசெமிக் குறியீடு இருந்தாலும், கிளைசெமிக் லோடு இதில் மிகவும் குறைவாகவே உள்ளது.. எனவே, அடிக்கடி சமையலில் சேர்த்து இந்த கிழங்குகளை கொள்ளலாம்.
அதிலும், பீட்ரூட் இலைகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரையை குறைப்பதே இந்த இனிப்பு காய்களின் கீரைதான்.. ரத்த ஓட்டத்தை சீராக்கி, செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது இந்த இலைகள்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பண்பு இந்த இலைகளுக்கு உள்ளது.. இந்த இலைகளை பொடி பொடியாக நறுக்கக்கூடாதாம். செடிகளில், கத்தியை வைத்து வெட்டி எடுக்க கூடாதாம்.. கையிலேயே பறித்து, பக்குவமாக சமைக்க வேண்டுமாம்.
குறியீடுகள்: கிழங்கு வகைகளிலேயே சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் இந்த சேனைக்கிழங்கு தான். காரணம், மிக மிகக்குறைந்த கிளைசெமிக் குறியீடு, கிளைசெமிக் லோடு கொண்டது இந்த சேனைக்கிழங்கு.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரக்கூடியது முள்ளங்கி கிழங்குகள்.. முள்ளங்கியின் கீரையும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.. இந்த கீரையலிருந்து சாறு எடுத்து, வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம். அந்தவகையில் சிறுநீரகம் சீராக செயல்பட பேருதவி புரிகிறது.
உருளைக்கிழங்கு: இருக்கிற கிழங்குகளிலேயே ரொம்ப மோசமானது இந்த உருளைக்கிழங்குதானாம்.. சர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கை தொட்டுக்கூட பார்க்ககூடாதாம்.
அதற்காக மற்ற கிழங்குகளை அதிகமாக சாப்பிடவும் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதுவும் எண்ணெய்யில் வறுக்காமல், பொரிக்காமல், மிதமான அளவில் குழம்பு, கூட்டு, பொரியலாக சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே??
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications