வெள்ளை அவல்.. கொஞ்சூண்டு போதுமே.. சோகையை விரட்டி சரசரவென வெயிட் குறைக்கும் அவல்.. சூப்பரான காலை உணவு
சென்னை: உடல் எடை குறைவதில் அவலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. எப்படி தெரியுமா? எப்படியெல்லாம் அவலை பயன்படுத்தலாம் தெரியுமா?
அவலில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் C, A, கார்போஹைட்ரேட்கள் என எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஒரு கப் அவலில், 250 கலோரிகள் இருக்கிறதாம்.. இதுவே வறுத்த அவலில் 333 கலோரிகள் இருக்கிறதாம்.. காலையில் அவல் சாப்பிட்டால், நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது..

2 வகைகள்: சிவப்பு அவல், வெள்ளை அவல் என்று 2 வகைகள் இருந்தாலும், இதில் கூடுதல் சத்துக்களை கொண்டது சிவப்பு அவல்தான். அவலில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி சிவப்பு நிறத்துக்கு காரணமாகும்.
காலை உணவில் இந்த அவலை எடுத்து கொள்ளும்போது அதிக பலனை தருகிறது.. உடலில் நோய் எதிர்ப்புகூடுகிறது. இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண்களும் ஆறும். புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில், சிவப்பு அவலுக்கு பெரும் பங்கு உள்ளது..
நார்ச்சத்து: சர்க்கரை நோயாளிகள், சிவப்பு அவலை சாப்பிடலாம். அவலை உணவில் சேர்ப்பதால், திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால், இதை அளவுடன் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
அதேபோல, ரத்தசோகையால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த சிவப்பு அவலை சாப்பிட வேண்டும். ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம் இதுவாகும்.
உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், அரிசி அவலுக்கு பதிலாக கோதுமை அவல் உணவில் சேர்க்கலாம்.. அல்லது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, என சிறுதானியங்களிலிருந்து பெறப்படும் அவலை உணவில் சேர்த்து கொண்டால் நார்ச்சத்து அதிகரிக்கும்.. நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் அவல் மூலம் கிடைத்துவிடுகின்றன.
அவல் செய்யும்போது, அதே அளவுக்கு காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் அதைவிட சத்துக்கள் அதிகமாக கிடைக்கும், வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.. அவலில் பால் அல்லது தண்ணீர் கலந்து கருப்பட்டி சேர்த்து தரலாம்.. இதனால் உடலிலுள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.. மூளை செல்களையும் புத்துணர்ச்சியாக்கும்.
புற்றுநோய்: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது இந்த அவல்.. புற்றுநோய் உண்டாகும் செல்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும் தன்மை இந்த அவலுக்கு உண்டு.
வெள்ளை அவலிலும் நல்ல சத்துக்கள் உள்ளன.. தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் B, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பலன்கள்: இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா? எளிதில் செரிமானமாகும்.. உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.. உடல்சூட்டை விரைந்து தணிக்கும். செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். உடல் எடையைக் குறைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இரு வகையான அவலில் நன்மைகள் அதிகம் கிடைத்தாலும், அளவுடனேயே சாப்பிட வேண்டும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications