தேங்காய் பாறை சூப்பர்.. எலும்புகளின் உறுதிக்கு உதவும் பாறை மீன்கள்.. கெட்ட கொழுப்பை குறைக்கும் மீன்
சென்னை: சத்துக்கள் அதிகம் உள்ள பாறை மீன்களின் நன்மைகள் என்னென்ன? புரோட்டீன்கள் அதிகம் உள்ள தேங்காய் பாறை மீனின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
பாறை மீன்களிலேயே நிறைய வகைகள் இருக்கின்றன.. தேங்காய் பாறை மீன், மஞ்ச பாறை மீன், கடல் பாறை மீன், தோள் பாறை மீன், முட்டா பாறை மீன், நெய் பாறை மீன் என பலவகை உண்டு..

பாறை மீன்கள்: எந்தவகை பாறை மீன்களானாலும், அதில் புரோட்டீன்கள் நிறைய இருக்கும். கலோரிகள் குறைவாக இருக்கும். எனவே, உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், பாறையை உணவில் சேர்த்து கொள்ளலாம்..
நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைந்து, நல்ல கொழுப்புகளின் அளவை இந்த பாறை மீன்கள் அதிகரிக்க செய்கின்றன.. அதனால்தான், இதய பாதுகாப்பை தரக்கூடிய மீன்களில் பாறையும் ஒன்றாக உள்ளது... அதுமட்டுமல்ல, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்துவிடுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: பாறை மீனில் வைட்டமின் D என்ற உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.. அத்துடன் புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது... சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாறை மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆஸ்துமாவை தடுக்க, இந்த பாறை மீன்கள் மிகவும் நல்லது.. பாறை மீனில் அயோடின் சத்து உள்ளதால், முன்கழுத்துக்கழலை நோய் அபாயத்தையும் முன்கூட்டியே தடுத்து விடுகிறது.
எலும்புகள்: பாறை மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. அத்துடன் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. எனவேதான், இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயார் செய்யப்படுகின்றன. வைட்டமின் A நிரம்பியிருக்கும் பாறை மீனை சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதில்லை..
தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா வந்தால் முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து விடுகிறது. செல்லுலார் மற்றும் இணைப்பு திசுக்களின் வளர்ச்சிக்கு இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்ய தேவையான அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.
தேங்காய் பாறை: அதிலும் தேங்காய் பாறை மீனை பொறுத்தவரை, வைட்டமின் A, D, B 12 சத்துக்கள் இந்த பாறை மீனில் உள்ளன.. வெறும் 100 கிராம் இந்த பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் நிறைந்திருக்கின்றன. மீனில், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பாறை மீனை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.. கலோரிகளும் இதில் குறைவாக உள்ளன.
பாறைகளிலேயே முதலிடம் தேங்காய்பாறைக்குதானாம்.. இதற்கு அடுத்து முயல்பாறைக்கு கிராக்கி நிறைய இருக்கிறதாம்.. காரணம், இந்த வகை மீன் மார்க்கெட்டுக்கே வராது.. கடற்கரையிலேயே வியாபாரிகளே பங்கு போட்டுக்கொள்வார்களாம்..,அந்த அளவுக்கு ருசி அபாரமாக இருக்குமாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications