தொப்புளில் கொழுப்பு.. ஆண்களை பாடாய் படுத்தும் தொப்பை.. பெண்களுக்கு ஏற்படும் தொல்லை.. இதுதான் காரணமா?
சென்னை: ஆண்களுக்கு வயிற்று பகுதியில் கொழுப்புகள் ஏன் சேர்கின்றன தெரியுமா? இந்த கொழுப்பை கரைப்பதற்கு உதவும் உணவுகள் என்னென்ன?
ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அடிவயிற்றில் கொழுப்புகள் சேர்ந்துவிடும்.. இதில், பெண்களுக்கு பின்பக்கங்களிலும், தொடைகளிலும் கொழுப்பு செல்கள் இறுக்கமாகிவிடும்.. இந்த கொழுப்புகள விடாப்பிடியானவை.

கொழுப்பு அமிலங்கள்: அதாவது, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காக தம்முடைய கொழுப்பு அமிலங்களை தந்து உதவும்... சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இதுபோன்ற ஒரு அமைப்பை பெற்றுள்ளது..
ஊட்ட பற்றாக்குறைகள் காரணமாக, தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால், பின்பக்கங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டு சத்துக்குறைபாட்டை ஈடுசெய்கிறது. அதனால்தான், பெண்களுக்கு தொடை, பின்பக்கங்களில் கொழுப்பு என்பது ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.
மாதவிடாய்: அதேசமயம், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, இடுப்பிலிருந்து தொடைகள் மற்றும் வயிறு வரை கொழுப்பு நகரக்கூடும் என்பதால், பல பெண்களுக்கு மெனோபஸ் காலத்தில் உடல் பருமன் அதிகரித்துவிடும். இது மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கீல்வாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம்.
அதேபோல, ஆண்களுக்கு கொழுப்புகள் அடிவயிறு பகுதிகளிலோ, அல்லது சிறுகுடல் பகுதியிலோ கொழுப்பு திரண்டால் பல சிக்கல்களை தந்துவிடும்.. உடலில் கொழுப்புச்சத்து உபரியாகிறபோது, அது ஆண்களுக்கு தொப்புள் பகுதியிலேயே சேரும் என்பதால், ஆபத்தும் அதிகமாகிவிடுகிறது.
கல்லீரல்: தோலின் அடியில் திரளும் கொழுப்பின் அளவைவிட, தொப்புளுக்கு அருகில் சேர்வது அதிகமாகும். குடல்களையும் மற்ற உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு கொழுப்பு சேர்ந்துவிடும்.. அதிலும், கல்லீரலுக்கு செல்கிற ரத்தக் குழாய்களுக்குள் கொழுப்பு அமிலங்கள் புகுந்தாலும், ஆபத்து அதிகமாகிவிடும்..
கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி கிள்ளி பார்க்கும்போது, ஒரு அங்குல தடிமனுக்கு மேல் சதை சிக்கினால் கொழுப்பு ஏறிவிட்டதாக அர்த்தமாம்.
ஆலோசனைகள்: இந்த அதிகப்படியான உடல் கொழுப்பு, இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் தங்களைத் தாக்க அதிகம் வாய்ப்புள்ளது... எனவே, மருத்துவர்களை சந்தித்து இதற்கு முறையான ஆலோசனையை பெறுவதே சிறந்தது. அதேபோல, உணவிலும் சிறிது கவனத்தை செலுத்த வேண்டும்.
குறிப்பாக, தர்பூசணி பழங்கள் மிகவும் நல்லது.. வைட்டமின் A, C, அமினோ அமிலம் அதிகமாக உள்ளதால், உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன், வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்க உதவும்.. வாழைப்பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றிலுள்ள கொழுப்பு கரைய உதவும். அதேபோல காலை உணவில் ஓட்ஸ் சிறந்த தேர்வாகும்.. நார்சத்து அதிகம் என்பதால், உடலிலுள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது..!!
பார்லி: இதில் பார்லியையும் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், ஓட்ஸ், பார்லி இவை இரண்டுமே கரையக்கூடிய நார்ச்சத்துக்களாகும்.. இந்த முழு தானியங்களில் பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளன.. எனவே, எல்டிஎல்-கொழுப்பைக் குறைக்க பேருதவி புரிகிறது.. பீட்டா-குளுக்கன் குடலில் உள்ள கொலஸ்ட்ராலில் உள்ள பித்த அமிலங்களுடன் பிணைக்கிறது, இது உங்கள் ரத்தத்தில் குறைந்த கொலஸ்ட்ரால் செல்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.












Click it and Unblock the Notifications