முடவாட்டுக்கால் கிழங்கு.. முழங்கால் வலி முதல் முடக்குவாதம் வரை.. சைவ ஆட்டுக்காலில் அத்தனையும் சத்து
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியை தரும் முடக்குவாத பிரச்சனைக்கும், மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பது முடக்குவாத கிழங்குதான்.. இந்த கிழங்கில் எப்படி சூப் செய்வது தெரியுமா?
முடக்குவாதத்தினை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வு காணாவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். இதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும்.

சர்க்கரை: முக்கியமாக, சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும்.
அதேபோல, இதில் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து குடிக்கலாம். ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன.
எலும்பு அடர்த்தி: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாகும். எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள்... இந்த கிழங்கில் எப்படி சூப் வைப்பது தெரியுமா?
ஆட்டுக்கால்: முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மீதுள்ள தோல் மற்றும் முடிகளை நீக்கிவிட்டு, உள்ளே மஞ்சள் கலரில் கிழங்கினை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு கிழங்கினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுகளைகொட்டி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் முடவாட்டுக்கால் சூப் ரெடி.
வேறு வகை சூப்: அல்லது வேறு வகையிலும் சூப் செய்யலாம்.. இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.
கிழங்கு சாறு: இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் சாறு போல தயாரித்து குடிக்கலாம்.. அதாவது, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கி, சுடுசோறில் பிசைந்து சாப்பிட வேண்டும்.
மூட்டுவலி: சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கும் இந்த சூப்பை குடிக்க தரலாம்.. மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது. 15 நாட்களுக்கு இந்த சூப் குடித்துவரும்போது நல்ல பலன் கிடைக்குமாம். ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டுமாம்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications