Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேன்சருக்கு எதிரானது.. நெடுநாள் படுக்கையில் விழுந்தவரையும் தெம்புடன் எழ செய்யும் மாதுளை.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதுளம் பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பாதித்து, நீண்ட கால சிகிச்சை பெற்றவர்களுக்கு, மாதுளம்பழச்சாறு தரப்படும். ஏன் தெரியுமா?

மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.. இதை சாப்பிடும்போது, புற்றுநோய் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும்.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும்கூட, மாதுளம் பழத்தை விடாமல் சாப்பிடுவார்கள்..

Amazing Medicinal Benefits in the Pomegranate and Do you now Healthy drink Pomegranate Juice is the cancer prevention

உடல் எடை: மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தீர்க்கும்.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த இந்த மாதுளை மிகச்சிறந்த உணவாகும்.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கும்.. இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

இந்த பழத்தின் விதைகள், நம்முடைய சருமத்துக்கும் மிகவும் நல்லது. தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும்... தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியை தூண்டும். ஆன்டி ஏஜிங் சீரம், இந்த மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. எனினும் பழமாகவே சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.

பெண்கள் மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். எனவே மெனோபாஸ் சமயத்தில் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடித்தால், பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை தூண்டும்.. எலும்புகளும் வலுப்பெற உதவும்..


பெண்களுக்கு கருவுறுதலில் தொந்தரவு இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம்... இதனால், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மூளைத்திறன்: மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன்னுடைய சக்திகளை அதிகரித்து, மூளையை சுறுசுறுப்பாக செய்யும்.. நினைவுத்திறனும் அதிகரிக்கும்.. மூளைக் கட்டிகளும் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

வெளிநாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்த பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்கு தருகிறார்களாம்.. எனவே, கர்ப்பிணி பெண்கள், தினமும் மாதுளம் ஜூஸ் குடித்து வந்தாலே, குழந்தையின் மூளை நன்றாக வளர துணைபுரியும்.தொடர்ந்து 2 வாரங்களுக்கு மாதுளம்பழ ஜூஸ் குடித்து வந்தாலே ரத்த அழுத்தம் குறையுமாம்..

கீமோ தெரபி: ஆனால், புற்றுநோய் பாதித்து, கீமோ தெரபி சிகிச்சை முடித்தவர்களுக்கு இந்த மாதுளை ஜுஸ் நிறைய தரப்படுகிறது.. ஏன் தெரியுமா? எல்லா ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்களும் நிறைந்துள்ளதால், புனிகலஜின், அந்தோசயினின்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துக்கு எதிராக போராடி, உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைத்து, செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது இந்த மாதுளை முத்துக்கள்.

இதிலிருக்கும் பாலிபினால்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க துணைபுரிகிறது.. அதனால்தான், நாள்பட்ட நோய் பாதிப்புகளாக இருந்துவரும் நீரிழிவு, இதய நோய் பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு எதிராக போராடுகிறது.

மாதுளம் பழம்: மாதுளையில் உள்ள எலாஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.. இந்த எலாஜிக் அமிலம், அந்தோசயினின்கள் போன்ற சேர்மங்கள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கின்றதாம்.. இவைகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுத்து, அப்போப்டொசிஸை ஊக்குவிக்கின்றன.

அதாவது உடல் இயற்கையாக சேதமடைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் செல்களை நீக்கும் பணிக்கு "அப்போப்டெசிஸ்" என்பார்கள். அதனால், உங்கள் தினசரி உணவில் மாதுளையை சேர்த்துக்கொள்வதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+