கற்பூரவள்ளி வாழை பெஸ்ட்.. தினமும் 1 வாழைப்பழம் போதும்! வாழைப்பழத்தின் அற்புதம் - ஆச்சரியம் - அதிசயம்
சென்னை: வாழைப்பழத்தை தினந்தோறும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா?
100 கிராம் எடையுள்ள ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் 75% தண்ணீர் உள்ளதாம்.. எந்தவகையான வாழைப்பழம் என்றாலும் அதில் குறிப்பிடத்தக்க மருத்துவ நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.

நன்மைகள்: வாழைப்பழத்தில் உள்ள ஸ்பெஷல் சத்துக்கள் பொட்டாசியம்தான்.. நம்முடைய இதயம், தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் மிகவும் முக்கியமான சத்தாகும்..
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட சொல்ல பிரதான காரணமே இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுதான்... இந்த பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடும்போது, ரத்த அழுத்தத்தை குறைக்க பேருதவி புரிகிறது.. பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயங்களையும் குறைக்கிறது.
எடைகுறைவு: வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் மிகவும் குறைவாகும்.. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு இந்த வாழைப்பழமாகும்.. இதனால், பசியும் கட்டுப்படும், மேற்கொண்டு அதிக உணவையும் சாப்பிடாமல் தடுத்துவிடும்..
அடுத்ததாக, வாழைப்பழத்தில் வைட்டமின் B6 சத்துக்கள், நம்முடைய மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக உள்ளது.. இந்த B6 சத்துக்கள்தான், செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது... எனவே, தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், டென்ஷன், படபடப்பு குறைந்து, சாந்தமான மனநிலை ஏற்படும்.
சரும நலன்கள்: வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் C சத்துக்களானது, ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது.. இது நம்முடைய சருமத்தை காக்க உதவுகிறது.. வயதான தோற்றத்தை தள்ளிப்போட்டு, சுருக்கங்கள் எழுவதையும் முன்கூட்டியே தடுக்கிறது..
வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்துள்ளதால், ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடலுக்கு தருகின்றன.. இதிலுள்ள மெக்னீசியம் சத்துக்கள் நம்முடைய எலும்புகள், பற்கள், தசைகளின் ஆரோக்கியத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன..
குடல் ஆரோக்கியம்: நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலை வாழைப்பழங்கள் போக்குகின்றன.. அஜீரண கோளாறுகள் உள்ளவர்கள் உட்பட யாராக இருந்தாலும் தினமும் உணவுக்கு பிறகு ஏதாவது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும்.. மலச்சிக்கல் தீர்வதுடன், குடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது..
பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் B6, வைட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
பச்சை வாழைப்பழம்: பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம். பழுத்த வாழைப்பழங்களை விட பழுக்காத வாழைப்பழங்களில் குறைவான சர்க்கரையும், அதிக ஸ்டார்ச் எதிர்ப்புத் திறன் உள்ளது..
செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்கிறார்கள். காரணம், இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளன.. நேந்திரம் பழங்களிலும் நார்ச்சத்து நிறைய உள்ளது. எனினும், வாரம் 1 அல்லது 2 சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம். அதுவும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொண்டால் கூடுதல் ஆரோக்கியம் தழைக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications