Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெந்தய தண்ணீர்.. இப்படி குடிச்சிட்டு வந்தாலே நூறு நோயும் விலகிடும்.. வெந்தய நீரின் எண்ணற்ற பயன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெந்தய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வெந்தயத்தை முளை கட்டுவது எப்படி தெரியுமா?

வெந்தயத்தை பொறுத்தவரை, நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன.. உடல்சூட்டை தணிக்கக்கூடியது வெந்தயம்.. சிறுநீரையும் பெருக்கக்கூடியது..

Fenugreek fenugreek water Piles

வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன..

இந்த நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.. நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.. சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.. கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பலத்தை சேர்க்கிறது.

தாய்மார்கள்: மூட்டுகளுக்கு வலு கிடைத்துவிடும்.. நோய் எதிர்ப்பு கணையத்தில் பீட்டா செல்கள் உருவாகுவதை மேம்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த முளைகட்டிய வெந்தயம், ஒரு வரப்பிரசாதமாகும். முறையற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் சிறந்த மருந்தாகும். இந்த விதையில் ஆல்கலாய்டுகள் உள்ளதால், அஜீரணத்தை போக்கி, பசியை தூண்டக்கூடியது.. இதனால் நரம்புகளும் பலமாகின்றன.

முளைக்கட்டிய வெந்தயத்தை பயன்படுத்தினால், அதிலுள்ள முழு பலனையும் பெற முடியும்.. 10 மணி நேரம் வெந்தயத்தை ஊறவைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் மறுபடியும் கட்டிவைத்து, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதன்மீது அடிக்கடி தண்ணீரை மட்டும் லேசாக தெளித்துவிட்டால் போதும். முளை கட்டிய வெந்தயம் நமக்கு கிடைத்துவிடும்.

முளை கட்டிய வெந்தயம்: வெந்தயத்தை முளைகட்டி எடுத்துவிட்டால், அதிலுள்ள கசப்பு தன்மை நீங்கி, இனிப்பு சுவை வந்துவிடும். இந்த முளைகட்டிய வெந்தயத்திலேயே லேசாக மிளகுத்தூள், உப்பு கலந்து சாப்பிடலாம். அல்லது சாலட்களிலும், சூப்களிலும் பயன்படுத்தலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. இந்த தண்ணீரை அப்படியே குடிக்கலாம்.

ஆனால், அலர்ஜி உள்ளவர்கள், நாட்பட்ட மருந்து சாப்பிடுபவர்கள், பலவீனமான சிறுநீரகங்களை கொண்டவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையில்லாமல், முளைகட்டிய வெந்தயம் உள்ளிட்ட முளைக்கட்டிய பயிறுகளை சாப்பிட வேண்டாம்.

வெந்தய நீர்: வெந்தய நீர் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வெந்தய நீரை 2 வகைகளில் தயாரிக்கலாம்.. இரண்டு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விட வேண்டும். வெந்தயத்தின் நிறம் மாறும் வரை தண்ணீரை கொதிக்க விட்டு, வடிகட்டி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இதில் சிறிது எலுமிச்சம் சாறு, தேன் கலந்து குடிக்கலாம்..

அல்லது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி வெறும் வயிற்றிலும் குடிக்கலாம். வெறும் வயிற்றில் இதை குடிக்கும்போது, உடலிலுள்ள உஷ்ணம் குறைந்து, ஊளைச்சதையும் குறைய துவங்கும்.. வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசிய சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது.

கொழுப்பு: இந்த வெந்தய நீரில் செரிமான நொதிகள் உள்ளதால், ஜீரணத்தை எளிதாக்குகின்றன.. குடல் இயக்கம் மேம்படும்.. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க இந்த தண்ணீர் உதவுகிறது. வெந்தய தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்துவிடும்.. இந்த தண்ணீரை குடித்துவரும்போது, உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறைகிறது... தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகிறது.

காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை போக்க உதவுகிறது. அத்துடன், உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் நீங்கிவிடும்.. சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மெல்ல குறைய துவங்கும். ஆனால், எவ்வளவு நன்மையை தந்தாலும் வெந்தய தண்ணீரை அளவுடன் குடிக்க வேண்டும்... அல்லது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று குடிப்பது முறையான ஆரோக்கியமாகும்.

ஹார்மோன்: அதுமட்டுமல்ல, வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் உள்ள ஆல்காலய்டுகள் மாதவிடாய் வலியை குறைக்கும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, பிடிப்புகள், கை, கால் குடைச்சல்கள் போன்ற தொந்தரவுகளை சரி செய்ய இந்த தண்ணீர் உதவுகிறது.

மெனோபாஸ் அறிகுறிகளை அனுபவிக்கும் பெண்களுக்கு இந்த நீர் ஒரு அருமருந்தாகும்.. ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் (Home Remedy For Hormonal Imbalance) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. உடலிலுள்ள அமிலத்தன்மையை சரிசெய்ய இந்த வெந்தய நீர் உதவுவதுடன், பக்கவாதம், அசிடிட்டி பிரச்சனைகளுக்கும் தீர்வை தருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+