பிரிட்ஜ்ஜில் பழம் வைக்கறீங்களா? ஃப்ரீஸரில் மூக்கு கண்ணாடி? இதென்ன புதுசா? முதல்ல இதை படிங்க: டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டு ஃப்ரிட்ஜில் சிலவகையான பழங்களை வைக்கக்கூடாது.. அதேபோல மருந்துகளை வைக்கலாமா?
நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் ஃப்ரிட்ஜ்களில் சில காய்கறிகளையும், பழங்களையும் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள்.. குறிப்பாக, உருளைக்கிழங்கு உட்பட கிழங்கு வகைகள், முட்டை, தக்காளி, பிரட், தேன், கீரைகள், பூண்டு, வாழைப்பழம், தர்பூசணி, இப்படி பல்வேறு உணவு பொருட்களை பிரிட்ஜில் வைக்ககூடாது.

கருப்பு பழங்கள்: இதனால், சத்து குறைவதுடன், உடலுக்கும் தீங்கு தந்துவிடும் என்கிறார்கள்.. ஆரஞ்சு உட்பட சிட்ரஸ் பழ வகைகளுடன், ப்ளம்ஸ், பீச், ஆஃப்ரிகாட் போன்ற கருப்பு பழங்களும் அடங்கும்.. துளசி , ரோஸ்மேரி போன்ற மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது... முழுதாக வாங்கிய முலாம்பழத்தையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது.
கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்... அதனால், உணவு பொருட்கள் விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
மருந்துகள்: அதேசமயம், உணவுப்பொருள் அல்லாத பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.. இன்சுலின் உட்பட சில மருந்துகளையும் ஃபிரிட்ஜில் வைப்பதாக இருந்தால், இன்சுலின் வைப்பதற்கென்றே ஃபிரிட்ஜில் ஒரு இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், இதன் அருகிலேயே உணவுப்பொருட்கள், பூக்கள் போன்றவற்றை வைக்கக்கூடாது.
அதேபோல, மருந்துகளுக்கு பக்கத்தில், இறைச்சி உணவுகளையும் வைக்கக்கூடாது. காரணம், மருந்துகளில் மருந்தில், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளதாம்.
கண்ணாடி: இந்த உணவு சாராத பொருட்களில் சமீப காலமாக மூக்கு கண்ணாடியையும் சேர்ந்துள்ளது.. பிரிட்ஜ் ஃப்ரீசருக்குள் கண்ணாடி வைப்பதால் சில நன்மைகள் இருப்பதாக பலரும் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பெண்ணொருவர் பதிவு செய்திருந்தார்.. தன்னுடைய கண்ணாடியை அவர் வீட்டு ஃப்ரீசருக்குள் வைத்து பராமரிப்பு செய்கிறாராம்.. ஃப்ரீசருக்குள் கண்ணாடியை வைத்துவிட்டு ஜஸ்ட் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கதவை மூடிவிட வேண்டுமாம்.
மிக குறைந்த வெப்ப நிலையில் கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதால், நீர் துளிகள் ஏற்பட்டிருக்கும். அதனை மெல்லிய துணியால் துடைக்கும்போது கண்ணாடியில் இருக்கும் மாசுகள் நீங்கிவிடுமாம்.. இதனால் கண்ணாடிக்கு எந்தவித ஸ்க்ராட்ச்சும் ஏற்படாது என்கிறார்.. வீட்டில் மற்ற இடங்களில் கண்ணாடியை வைப்பதைவிட, ப்ரீசருக்குள் வைப்பதால், ஸ்க்ராட்ச் ஆக வாய்ப்பில்லை என்கிறார் அந்த பெண்மணி.
இது சாத்தியமா?: அதுமட்டுமல்ல, கண்ணாடியில் ஏற்கனவே ஸ்க்ராட்ச் ஆகியிருந்தாலும் கூட அவை நீங்கிவிடும் என்று சர்ப்ரைஸ் தருகிறார் அந்த பெண்.. இதைப்பார்த்த நெட்டிசன்களும், தங்கள் மூக்கு கண்ணாடியை ஃப்ரீசருக்குள் வைத்து டெஸ்ட் செய்தார்கள்.. சிலர் பாசிட்டிவ் ரிசல்ட்டை பதிவிட்டார்கள்.. மேலும் சிலரோ இதை கொஞ்சமும் நம்பால், கண்டுகொள்ளவேயில்லை. ஆனாலும், ப்ரீசருக்குள் கண்ணாடி வைப்பது நல்லதா? என்ற உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications