ஒரே நாள் இரவில் முகப்பருக்கள் நீங்கி.. தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ எடுங்க அந்த எலுமிச்சை சாறை
சென்னை: முகம் எப்போதும் பளபளப்பாகவும் வெண்மையாகவும் இருக்க வேண்டுமா, அப்படியெனில் இந்த முல்தானி மெட்டி பவுடரை எடுங்க!
கருப்பே அழகு காந்தலே ருசி என்பார்கள். ஆனால் சிலருக்கு கருப்பாக இருக்கிறோமே என்ற கவலை இருக்கும். அது போல் வயதாக ஆக தோலில் சுருக்கங்கள் விழத் தொடங்கும். இது இயற்கையானதே.

ஆனால் சிலருக்கு மிக சிறிய வயதிலேயே பெரிய வயதிற்கான முக அமைப்பு இருக்கும். இது பலருக்கு கவலையை கொடுக்கும். கருப்பு என்றால் அதில் மாநிறம் இருந்தாலும் நாம் சுண்டினால் ரத்தம் வரும் நிறத்தில் இல்லையே என கவலைப்படுவார்கள்.
அழுக்கை நீக்க: அழகு என்ற எல்லாவற்றுக்கும் மேல் நம் முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க வேண்டும். இதற்காக கடைகளில் விற்பனையாகும் கிரீம்களை போடாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு வித பேஸ்ட்டை உருவாக்கலாம். இதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் தேன், முல்தானிமெட்டி, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, கடலை மாவு, பயத்த மாவு ஆகியவை ஆகும்.
தேனின் குணம்: இவற்றில் தேனுக்கு இருக்கும் குணங்கள் என்ன என்றால் அது உடலுக்கு நன்மையை தரும். கிருமிநாசினியாக செயல்படும். தேனீக்கள் மூலம் பல பூக்களில் இருந்து தேன் சேகரிக்கப்படுவதால் அந்த பூக்களின் மருத்துவ குணங்களும் ஒரு சேர கிடைக்கும். அது போல் தோலின் மேல் உள்ள அழுக்கை நீக்கும். தோலில் உள்ள சுருக்கத்தையும் போக்கும் குணம் கொண்டது. தோலுக்கு அழகையும் பளபளப்பையும் கொடுக்கும்.
முல்தானிமெட்டி: இது முகச்சுருக்கத்தை போக்கும், தோலில் பொரி பொரியாக இருப்பதையும் நீக்கும். தோலுக்கு அழகை கொடுத்து அழுக்கை நீக்கும். கருமை நிற திட்டுக்களையும் நீக்கும்.
அடுத்ததாக எலுமிச்சை சாறு: இது முகத்தில் உள்ள கருமையை போக்கும், கிருமி நாசினியாக இருக்கும். முகத்தில் உள்ள எரிச்சல், அரிப்பு, நமச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
மஞ்சள் தூள்: இந்த மஞ்சள் தூள் கிருமிநாசினியாக இருக்கும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இது தோலுக்கு புத்துணர்ச்சிய கொடுக்கும். தோலின் நிறத்தை அதிகரித்து , முகத்திற்கு ரத்த ஓட்டத்தையும் கொடுக்கிறது. பருக்கள் வராமல் தடுக்கும். அது போல் கடலை மாவு- சருமத்தை மென்மையாக்கும் வழுவழுப்பு கூடும். இளமையாக காட்சியளிக்கும். சுருக்கம் ஏற்படாது.
தோல் மிருதுவாக: பயத்த மாவை பயன்படுத்துவதால் தோல் மிருதுவாகும். முக அழகை கெடுக்கும் பருக்கள் நீக்கி, முகத்தை கண்ணாடி போல் மினுமினுக்க செய்யும். இவற்றில் தேன் அரை டீஸ்பூன், முல்தானிமெட்டி பவுடர், 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கடலை மாவு -கால் டீஸ்பூன், பயத்த மாவு கால் டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அளவு எவ்வளவு: இவற்றில் பவுடராக சொன்னவற்றை நீரில் விட்டு குழைத்து கொண்டு அதில் தேன், எலுமிச்சை சாற்றை விட வேண்டும். பிறகு அதை நன்றாக கலந்து முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைத்து பிறகு மிதமான தண்ணீரில் அலம்பிக் கொள்ளவும். இது போல் மாதம் இரு முறையோ அல்லது 3 முறையோ போட்டால் நல்ல பலனை தரும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications