9வது முறை.. யமாலிடம் மீண்டும் மீண்டும் தோற்கும் எம்பாப்பே.. உலகக்கோப்பையை அதிரவிடும் 19 வயது வீரர்!

Subscribe to Oneindia Tamil

டெக்ஸாஸ்: பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவுக்கு எதிராக ஆடிய 11 போட்டிகளில் ஸ்பெயின் அணியின் லமின் யமால் 8 முறை வென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லமின் யமால் மிகப்பெரிய ஜாம்பவான் வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டின் அடையாளமாக மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோருக்கு பின் எம்பாப்பே இருந்து வருகிறார். அவருக்கு நிகராக எந்த வீரரும் போட்டி போட முடியாமல் திணறி வருகின்றனர். பிரான்ஸ் அணிக்காக ஆடினாலும், ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக ஆடினாலும் எம்பாப்பேவுக்கு தொல்லை கொடுப்பது அவ்வளவு எளிதானதல்ல.

Lamine Yamal

அப்படியாப்பட்ட எம்பாப்பேவுக்கு சவாலுக்கு மேல் சவால் அளித்து வருகிறார் 19 வயதேயான லமின் யமால். ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான யமால், இந்த உலகக்கோப்பைத் தொடரின் நட்சத்திர நாயகன் என்றே சொல்லிவிடலாம். உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன் யமால் பேசுகையில், பிரான்ஸ் அணி யாரையாவது பார்த்து பயப்பட வேண்டுமென்றால், அது நாங்களாக தான் இருக்கும் என்றார்.

19 வயது பையன் ஓவராக வாய் பேசுகிறார் என்று பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் யமால் சொன்னதை போலவே செயலிலும் காட்டி சென்றுள்ளார். 15 வயதிலேயே உலகின் மிகப்பெரிய அணியாக பார்சிலோனாவுக்கு அறிமுகமான யமால், இன்று வரை உச்சத்திலேயே இருக்கிறார். நேற்றிரவு ஸ்பெயின் அணியின் வெற்றிக்கும் யமால் மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எம்பாப்பேவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் யமால். அதாவது சர்வதேச போட்டியாக இருந்தாலும், கிளப் அணிக்காக ஆடிய போட்டியாக இருந்தாலும் யாமல் எப்போதும் எம்பாப்பேவுக்கு மேலாகவே இருந்து வருகிறார். இதுவரை எம்பாப்பேவை எதிர்த்து நேருக்கு நேராக 11 போட்டிகளில் யமால் ஆடியுள்ளார்.

அந்த 11 போட்டிகளில் 8ல் யமால் வென்று காட்டியுள்ளார். வேறு எந்த வீரரும் எம்பாப்பேவை இப்படியொரு ஆதிக்கம் செய்ததில்லை. இதனால் சர்வதேச கால்பந்துக்கு புதிய ஹீரோ கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யமாலின் ஆட்டத்திற்கு ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டமும் ஒரு காரணம் தான்.

அதன் மூலமாகவே 2024 யூரோ கோப்பை தொடங்கி இதுவரை ஒரு போட்டியில் கூட ஸ்பெயின் அணி தோற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் லூயிஸ் பொறுப்பேற்றதில் இருந்து ஸ்பெயின் அணி இதுவரை ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. இதனால் 2010 உலகக்கோப்பையை போல் மீண்டும் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+