குதிரை பேரத்தில் விஜய்.. வாக்குமூலம் கொடுத்துட்டாரே வைகோ! விஜயபாஸ்கர் வேற.. பாயிண்டை பிடித்த அதிமுக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜயின் குதிரை பேரத்திற்கு வைகோ, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டார்கள் எனவும், விசுவாசத்தால் கட்சியை வளர்க்க வேண்டுமே தவிர விலை போனவர்களை வைத்துக் கொண்டு அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் பேசிய அவர்," ஒரு கட்சி சின்னத்தில் நின்று மக்களின் நம்பிக்கை பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் விரல் மையின் ஈரம் காயும் முன்பே விலை பேசும் விபரீதத்தை த.வெ.க. கட்சி அரங்கேற்று வருவது இதுவரை தமிழக மக்கள் கண்டதில்லை.

நீதிக்கும், தர்மத்திற்கும், நியாயத்திற்கும், சட்டத்திற்கும் ஏன் மக்களுக்கும் சிறிது கூட அஞ்சாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஆஃபர் கொடுத்து ஆள் பிடிக்கு வேலை மட்டுமே செய்து. அதில் குறிப்பாக அதிமுகவை குறிவைத்து ஆள் பிடித்து த.வெ.க கட்சியின் ஆயுளை நீடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

RB Udhayakumar Vijay Vaiko

ஆர்பி உதயகுமார்

பட்ட பகலில், வெட்ட வெளிச்சத்தில் அதிகார ஆஃபர் கொடுத்து, குதிரை பேரத்தை நடத்துவதை ஜனநாயக மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் மௌனமாக கடந்து போவதின் என்ன மர்மம் என்னவென்று புரியவில்லை. கேட்பதற்கு நாதி இல்லையா? இந்த குதிரை பேரத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி வரும் மக்களே நீங்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் கொடுத்த வாக்குமூலம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளிவந்த பிறகு, விஜயபாஸ்கர் என்னை அப்ரோச் செய்திருந்தார்கள் பிடித்திருந்தது சேர்ந்திருக்கிறேன் என்று கூறினார்.

வைகோ

ராஜினாமா செய்யுங்கள் வெற்றி பெற வைக்கிறேன் என்று முதலில் வைகோ ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். பிறகு பிழல் சாட்சியான மர்மம்தான் புரியவில்லை .யார் கொடுத்த அழுத்தமோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பிழல் சாட்சியாக மாறிய மர்மம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப மனம் வரவில்லை. இது எல்லாம் எதற்காக நடக்கிறது?

முதலமைச்சர் விஜய்

கட்டமைப்பு இல்லாத த.வெ.க கட்சியை காப்பாற்ற அதிகாரத்தை மட்டும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் ஆஃபர் வழங்குவதால் த.வெ.க. கட்சியை வளர்க்க முடியும் என்று நம்புகிறாரோ என்ன தெரியவில்லை. சில வரலாற்று சம்பவங்கள் முதலமைச்சருக்கு தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி என்ன ஆனது என்பது நாட்டுக்கே தெரியும். அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆளுமை எப்படி இருந்தது? தற்போது அடையாளம் தெரியாமல் போய் போய்விட்டது.

குதிரை பேரம்

அதேபோல ஆம் ஆத்மி கெஜ்ரிவாலின் டெல்லி, பஞ்சாப்பை ஆளுமை எப்படி பேசப்பட்டது. தற்போது ஆளுமை எங்கே போனது? இதற்கு விடை தெரிந்தால் விஜய் இந்த விசுவாசத்தை விலை பேசும் ஆடுபுலி ஆட்டத்தை ஆட மட்டார். விசுவாசத்தால் கட்சியை வளர்க்க வேண்டுமே தவிர விலை போனவர்களை அழைத்துக் கொண்டு விலாசத்தை கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்வது விளம்பரத்திற்கு சரியாக இருக்கும். ஆனால் விசுவாசத்திற்கு அடித்தளமாக அமையாது.

அதிமுக

ஒன்றை மட்டும் முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் அதிமுக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கப்பட்டு ,அம்மாவால் வளர்க்கப்பட்டு எடப்பாடியார் தற்போது கட்டி காப்பாற்றப்பட்டு வருகிறது. அதிமுக என்பது political party leaders manufacturing ஆகும். இன்றைக்கு அதிமுகவில் சென்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக உள்ளார். அதேபோல திருநாவுக்கரசு காங்கிரசில் தலைவராக இருந்தார். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் திமுகவில் 12 அமைச்சர்களாக இருந்தார்கள். இவர்களெல்லாம் விருப்பம் பெற்று சென்றவர்கள் தான் விலை பேசி சென்றவர்கள் அல்ல" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+