இதை மட்டும் பண்ணுங்க.. கல்லு ஈஸியா கரைஞ்சிடும்.. கிட்னி ஸ்டோனை எளிதாக கரைக்க 6 வழிகள்!
சென்னை: சமீப காலமாக பலருக்கும் கிட்னியில் கல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் பலரும் கிட்னி ஸ்டோன் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு காலத்தில் அரிதாக இருந்த கிட்னி ஸ்டோன் பாதிப்பு இப்போது பலருக்கும் ஏற்பட தொடங்கி உள்ளது. அதிலும் பலர் காபி, டீ குடிப்பது அதிகம் ஆகி உள்ளது. நேரத்திற்கு தண்ணீர் குடிப்பது குறைந்து உள்ளது.
இன்னும் சிலர் ஜிம்மில் அதிக உடல் பயிற்சி செய்து, புரோட்டின் எடுத்து, சிக்ஸ் பேக் நிற்க வேண்டும் என்று தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொண்டு கிட்னியை கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி கிட்னி கல் மூலம் பாதிக்கப்படும் நபர்கள் வீட்டிலேயே கிட்னி கல்லை கரைக்க பல வழிகள் உள்ளன. அந்த வழிகளை இங்கே பார்க்கலாம்.

1. தண்ணீர்: கிட்னி கல்லைக் கரைக்க தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். வழக்கமாக குடிக்கும் 8க்கு பதிலாக ஒரு நாளைக்கு 12 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். கல் கரைந்த பின்பும் கூட தினமும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் மூலம் சிறுநீரக கற்களை எளிதாக கரைக்க முடியும்.
ஆனால் அதற்கு முறையாக தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் சிறுநீரின் நிறத்தில் கவனம் செலுத்துங்கள். அடர் மஞ்சள் சிறுநீர் நீரிழப்பு அறிகுறியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனே தண்ணீர் குடியுங்கள்.

2. எலுமிச்சைச் சாறு: எலுமிச்சையை தண்ணீரில் சேர்த்து குடியுங்கள். அதிக அளவு எலுமிச்சை குடிப்பது கல்லை கரைக்கும். எலுமிச்சையில் சிட்ரேட் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. சிட்ரேட் சிறிய கற்களை உடைத்து, அவற்றை சிறுநீரகத்தில் எளிதாக கடந்து செல்ல அனுமதிக்கிறது. இது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் வைட்டமின் சி சத்துக்களை வழங்குகிறது.
3. துளசி சாறு : துளசியில் நிறைய விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. துளசி சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சத்துக்கள் உள்ளன. இதனால் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். சிறுநீரகத்தை காப்பதோடு கற்களை வேகமாக கரைக்க உதவும். சிறுநீரகக் கற்களுக்கு துளசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து மிகக் குறைவான ஆராய்ச்சிகள் இருந்தாலும், பல மருத்துவர்கள் இதை குடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

4. ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. அசிட்டிக் அமிலம் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. சிறுநீரகங்களை கரைப்பதோடு கூடுதலாக, ஆப்பிள் சைடர் வினிகர் கற்களால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்.
5. அதிக அளவு இளநீர் குடிக்க வேண்டும். டீ , காபி குடிப்பதை முற்றிலுமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
6. மாதுளை சாறு: மாதுளை சாறு பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் சிறுநீரத்தில் இருந்து கற்கள் மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உதவும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் பங்கு வகிக்கிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications