Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதவிடாய் குறைவாக வருகிறதா? முறையற்ற மாதவிலக்கு வர காரணங்கள்? ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறிகளை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவிடாய் நேரத்தில் குறைவான ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்? அதேபோல சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? இதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும்... சிலசமயம், ஒரு சில நாள் முன்போ, அல்லது பின்போ மாதவிலக்கு வரலாம். ஆனால், 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பான விஷயமாகும்.

menstruation irregular periods menstrual cycle


சீரற்ற மாதவிடாய்: இந்த நாட்களிலிருந்து தவறும்போதுதான், அது சீரற்ற மாதவிடாயாக மாறுகிறது.. குறிப்பாக, 21 நாளைக்கு முன்பாகவோ அல்லது 35 நாட்களுக்கு பின்போ மாதவிடாய் ஏற்பட்டால் அது சீரற்ற மாதவிடாய் எனலாம்.

அதேபோல, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருந்தாலோ அல்லது வழக்கத்தைவிட மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு இருந்தாலோ அதை சீரற்ற மாதவிடாய் எனலாம்.

காரணங்கள்:
ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு இயக்கம் சீரற்று இருப்பது, கர்ப்பப்பை கோளாறுகள், அதீத உடற்பயிற்சி, சத்தான சாப்பாடு இல்லாதது, அதிக உடல் எடை, மிக குறைவான உடல் எடை, மன அழுத்தம், மாதவிலக்கு நிற்கும் மெனோபாஸ் காலம், சில வகையான மருந்துகளை சாப்பிடுவது, சில உடல்நலக்கோளாறுகள், இதெல்லாம்தான் சீரற்ற மாதவிடாய் ஏற்பட காரணமாகின்றன.

அதேபோல, குறைவாக மாதவிடாய் வருவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன.. அதிக எடை இழப்பு காரணமாக மாதவிடாய் வழக்கத்தைவிட குறையலாம்.. குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை சாப்பிடுவதாலும், குறைவான மாதவிடாய் ஏற்படலாம். ஏனென்றால், இதுபோன்ற மாத்திரைகளை சாப்பிடும்போது, கருமுட்டை வெளியிடுவதை தடுத்துவிடுமாம். இதனாலும் மாதவிடாய் காலங்கள் ரத்த போக்கும் ஏற்படலாம்.

கருமுட்டை:
பிசிஓஎஸ் எனப்படும் ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.. பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால், முட்டை முதிர்ச்சியடைவதை தடுத்துவிடும்.

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தாலும் இதே பிரச்சனை ஏற்படும். ஏனெனில், தைராய்டு உடலில் உள்ள ஹார்மோன் மாற்றத்தை உண்டு செய்யும். இது உடலின் வெப்பநிலை, வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. அதேபோல, அளவுக்கு அதிகமான மன அழுத்தமும் குறைவான மாதவிடாய்க்கு காரணமாகின்றன. எனவே, மேற்கண்ட அறிகுறிகள் எது இருந்தாலும், உடனடியாக மகப்பேறியியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+