தொடை கொழுப்பு.. தொங்கும் தொப்பை ஈஸியா கரையணுமா? இந்த சத்து காய்களை மட்டும் விட்டுடாதீங்க.. சூப்பர்
சென்னை: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க, நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த காய்கள் பேருதவி புரிகின்றன.. அந்தவகையில் 3 வகையான காய்கறிகளை பார்க்கலாம்.
ப்ரோக்கோலியை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், A, B6, B2, E போன்ற வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் இந்த புரோக்கோலியில் உள்ளன.. ப்ராக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும்..

கெட்ட கொழுப்பு: கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு நிறையவே உண்டு.. உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளும்போது, இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரைந்துவிடுமாம்.. ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுக்கிறது..
புரோக்கோலியை, சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து வதக்கி, வேகவைத்து அதில், மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம். அல்லது மிளகுதூள் சேர்த்து சூப் வைத்தும் சாப்பிடலாம்.
சூப்பர் டிரிங்க்: இந்த ப்ரோக்கோலியில் காபி பொடி கடைகளில் விற்கிறார்கள்.. அல்லது ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். பாலில் காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி தூளையும் ஒரு ஸ்பூன் கலந்து காபி போட்டு குடித்தால், உடல் எடை குறைவதில் நிறைய பலன் கிடைக்கிறதாம்..
அதாவது, 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர், அரை கப் ப்ரக்கோலியை பச்சையாக சாப்பிடுவதற்கு சமம் என்கிறார்கள்.. எனவே, டாக்டரின் ஆலோசனையை பெற்று, இந்த ப்ரோக்கோலி காபியை பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய்: அடுத்ததாக, வெள்ளரிக்காயை சொல்லலாம்.. இந்த வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் உள்ளன.. அதாவது 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளதாம்.. மற்ற 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் B, C, அடங்கியிருக்கின்றன.
இந்த காயை பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும்.. காரணம், சமைத்து சாப்பிட்டால், இதிலிருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அழிந்துவிடும்.. கலோரிகள் மிகவும் குறைவான வெள்ளரி பிஞ்சுவில், நார்ச்சத்து ஏராளமாக உள்ளன.. இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது... உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது இந்த காய்.
கொழுப்பு: எனவே, தினமும் வெள்ளரிக்காய், வெள்ளரி பிஞ்சு சாலட் செய்து சாப்பிட்டால், உடலிலுள்ள கொழுப்பு குறையும். இந்த காயில், ஸ்டேரோல் என்ற பொருள் இருப்பதால், நம்முடைய உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைய செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அடுத்ததாக நூல்கோலிலும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் உள்ளன.. இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது, செரிமானத்தை சீராக்குகிறது.. அடிக்கடி உணவில் நூல்கோலை சேர்த்து வரும்போது, தொடை, தொப்பை கொழுப்பு கரைய துவங்குகிறதாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications