ஹீட் ஸ்ட்ரோக்கால் மரணம்.. தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்! மருத்துவர்களின் அட்வைஸ் இதோ
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பிலிருந்து தப்ப மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
வெயில்: தமிழகத்தை பொறுத்த அளவில் வழக்கமாக ஏப்ரல் தொடக்கத்தில்தான் வெயில் தீவிரமடையும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிய வெயில் மார்ச் மாதத்தில் சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாக தொடங்கியது. அதேபோல ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயில் பதிவாகியது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் 28ம் தேதியன்று 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல சென்னை, மதுரை, நெல்லை, கொங்கு மாவட்டங்களிலும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இன்று சென்னை அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக்: அதிக வெப்பம் காரணமாக ஏராளமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாத பிரச்னை ஏற்படுகிறது. 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையில் உடல் தொடர்ந்து இயங்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இது ஒரு மருத்துவ அவசர நிலை பிரச்னை. மூளையின் ஒரு பகுதிக்கு ஆக்ஸிஜன் ஓட்டம் குறைவதை ஹீட் ஸ்ட்ரோக் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யாரை தாக்கும்?: ஹீட் ஸ்ட்ரோக் பொதுவாக எல்லா வயதினரையும் தாக்கும் என்றாலும் கூட, குழந்தைகள், சிறார்கள், இதய நோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய்களை கொண்டவர்கள், சர்க்கரை நோய்க்கு மருந்தை எடுத்துக்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்கள், வெயிலில் உடல் உழைப்பை கொடுத்து வேலை செய்பவர்கள் ஆகியோரை இந்த ஹீட் ஸ்ட்ரோக் உடனே தாக்குகிறது. எனவே கோடை காலத்தில் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அறிகுறிகள்: சில நேரங்களில் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. தவிர,
குமட்டல், வாந்தி, சோர்வு, பலவீனம், தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் வலி மற்றும் மயக்கம் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தவிர, அதிக உடல் வெப்பநிலை, வியர்வை இல்லாதது, வேகமாக இதய துடிப்பு, சுவாசிப்பதில் சிரமம், பிரமைகள், குழப்பம், வலிப்பு ஏற்படுவதும் வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகள்தான்.
முதலுதவி சிகிச்சைகள்: முதலில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவரை நிழலான பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். இறுக்கமான ஆடைகளை அவர் அணிந்திருந்தால், அதை தளர்த்த வேண்டும். குளிர்ந்த நீரை கொண்டு அவரது தோலில் அப்ளை செய்ய வேண்டும். குளிர்ந்த நீர் இல்லாதபட்சத்தில், சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரையே பயன்படுத்தலாம்.
அவர் சுயநினைவுடன் இருந்தால் அவருக்கு குடிக்க குளிர்ந்த நீரை கொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் சர்க்கரை நோயாளியாக இல்லையெனில் அவருக்கு குளிர்பானத்தை கொடுக்கலாம். குளிர்பானத்தில் ஆல்கஹால் அல்லது காஃபின் கலந்திருக்கக்கூடாது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications