Back Pain Relief Foods: முதுகு வலி பிரச்சனையை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
சென்னை: ஐடி துறையில் வேலை பார்க்கும் பலருக்கு முதுகு வலி என்பது தீராத பிரச்சினையாக இருக்கும். அவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பலர், கணினி சார்ந்த வேலைகளை செய்வோர் உள்ளிட்டோருக்கு முதுகுவலி என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் கொரோனா காலத்தில் சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஆப்ஷன் கொடுத்தது.

அதை சில நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொண்டன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் ஊழியர்களை பணி செய்ய சொல்கிறார்கள். இதனால் நிறுவனத்தில் 8 மணி நேரம் என்றால் வீட்டில் இருப்பதால் 12 மணி நேரம் வரை பணியாற்றுவதாக கூறுகிறார்கள்.
அவர்கள் கணினி முன்பு உட்கார்ந்தால் அந்த இடத்தை விட்டு அடிக்கடி எழாத நிலை ஏற்படுகிறது. இதனால் முதுகு வலி வாட்டி வதைக்கிறது. இதற்காக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும், எக்ஸ்ரே எடுத்தும் பயனளிக்கவில்லை. டிஸ்க் தேய்ந்துவிட்டது. சற்று ஓய்வெடுத்து வேலை பாருங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் நம்மால் அப்படி செய்ய முடியவில்லை.
அது போல் ஓட்டுநர்கள், சிசேரியன் ஆபரேஷன் செய்தவர்கள், நின்று கொண்டே வேலை பார்ப்பவர்கள் ஆகியோருக்கு இது போன்ற பிரச்சினை ஏற்படுவது வாடிக்கைதான். ஆனால் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம். அதிலும் இயற்கையான உணவு வகைகள் மூலம் எப்படி மீண்டு வரலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக் கட்டி போன்ற பால் பொருட்களை அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். ப்ளூபெர்ரி, அன்னாசி பழம், திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே இவற்றை பாலோ செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications