வாயை பிளக்க வைக்கும் வாழைப்பூ.. கிட்னியில் கற்களை நீக்கி.. ரத்த அணுக்களை பெருக்கும் ஆரோக்கியமான பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய வாழைப்பூக்களின் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? இந்த வாழைப்பூவை பெண்கள் கட்டாயம் சாப்பிட சொல்வதற்கு என்னென்ன காரணம் தெரியும்?

வாழைப்பூக்களில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன.. முக்கியமாக, வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு இந்த வாழைப்பூக்கள் உதவுகின்றன.

Banana flower Kidney Vaazhai poo

இரும்புச்சத்து நிறைந்த வாழைப்பூக்களிலிருந்து, தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.. ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள வாழைப்பூக்களிலிருந்து சாறு எடுத்து, சருமத்துக்கு உதவும் சீரம், கிரீம்கள் தயாரிக்கப்படுகின்றன.

கொழுப்புத்தன்மை: வாரம் 2 முறையாவது வாழைப்பூக்களை சமையலில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.. ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது இந்த பூக்கள். அதுமட்டுமல்லாமல், ரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் விலகி, ரத்த ஓட்டமும் சீராக அமையும்.. அதேபோல, ரத்தநாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புகளும் கரையும்..

துவர்ப்பு சுவை மிக்க வாழைப்பூக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.. மேம்படுத்தப்பட்ட குளுகோஸ் வெளியேறுவதுடன், ரத்த சர்க்கரை அளவும் சீராகிறது. கணையம் வலுபெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்கின்றன இந்த வாழை பூக்கள்.

சிறுநீரக கற்கள்: அடிக்கடி வாழைப்பூக்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதில்லை.. எனவே, சிறுநீரகத்தில் கற்களால் அவதிப்படுபவர்கள், வாழைப்பூவின் குருத்துகளை சிறிதாக நறுக்கி போட்டு சமைத்து சாப்பிடலாம். இதனால், சிறுநீரகத்தில் அந்த கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ரத்த விருத்தியையும் அதிகரிக்க செய்து, சிகப்பு ரத்த அணுக்களையும் கணிசமாக உற்பத்தி செய்யக்கூடியது இந்த வாழைப்பூக்கள். அதனால்தான், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், வாழைப்பூக்களை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.

வாழைப்பூக்கள்: இளம்பெண்களுக்கு ஏற்படும் ஹீமோகுளோபின் தொந்தரவுகளையும் இந்த வாழைப்பூக்கள் சரிசெய்யக்கூடியது.. அதேபோல, மாதவிலக்கின்போது ஏற்படும் உதிரப்போக்கினை வாழைப்பூக்கள் கட்டுப்படுத்தக்கூடியது.. அதனால்தான், அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது வயிற்றுவலி அதிகமாக இருந்தாலோ, வாழைப்பூவை வேகவைத்து சாப்பிட சொல்வார்கள்.

இந்த வாழைப்பூக்களை சுத்தம் செய்து, தயிர் கலந்து சாப்பிடும்போது, உடலில் புரொஜெஸ்டிரான் ஹார்மோனை அதிகரிக்க செய்து, அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.. இதனால் வெள்ளைப்படுதல் தொந்தரவு இருந்தாலும் நீங்கிவிடும். பாலூட்டும் பெண்கள், சமையலில் வாழைப்பூக்களை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்... கர்ப்பப்பையையும் வலுவாக்கும். பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் ரத்தப்போக்கும் இதனால் குறையும்.

உடல் எடை: வைட்டமின் A சத்து நிறைந்த வாழைப்பூக்களை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி தந்து வந்தால், கண்கள் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. விழிப்படலம், கருவிழியின் செயல்பாட்டை சீராக்கி, வருங்காலத்தில் கண்புரை ஏற்படுவடும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.. உடல் எடை குறைய நினைப்பவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது இந்த வாழைப்பூக்கள்.. புரோட்டீன், நார்ச்சத்துக்கள் இரண்டுமே இந்த பூவில் அதிகம் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் பேருதவி புரிகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+