மருத்துவ குணமிக்க மாசி கருவாடு! வாதம், பித்தம், ரத்த ஓட்டம் சீராக்கும, மகத்துவம் வாய்ந்த மாசி சம்பல்
சென்னை: திருமணம் ஆன ஆண்கள், பெண்களுக்கும் தினமும் மாசி கருவாடு சாப்பாட்டில் கொடுக்க என்ன காரணம் தெரியுமா? மாசி கருவாடுகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? மருத்துவ குணம் நிறைந்த இந்த மாசி கருவாடுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன?
கருவாடுகள் எப்போதுமே இரும்புச்சத்து நிறைந்தவை.. கருவாடு தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அனீமியா தொந்தரவு ஏற்படுவதில்லை.. கருவாடுகளில் கால்சியம் அதிகம் என்பதால், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதுடன், வாத, பித்தத்தை விலக்கக்கூடியவை.

உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் தன்மை இந்த கருவாடுகளுக்கு உள்ளது. சுவாச கோளாறுகளுக்கு கருவாடு போல சிறந்த மருந்து வேறு இருக்க முடியாது. பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரிசெய்ய, கிராமப்புற மக்களுக்கு இன்றுவரை பெரிதும் கை கொடுப்பது இந்த கருவாடுகள்தான். நீண்டநாள் படுக்கையில் கிடந்தவர்கள், உடல் நலம் குன்றியவர்களுக்கு இழந்த பலத்தை மீட்டு தருவதற்கு உதவுவதும் இந்த கருவாடுகள்தான். அனைத்து கருவாடுகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளது என்றாலும், மாசி கருவாடுகளில் சற்று கூடுதலான சத்துக்கள் நிறைந்துள்ளன.. இந்த மாசி கருவாடுகளை தயாரிப்பதே சற்று வித்தியாசமானது..
சூரை மீன்கள்: அதாவது, சூரை மீன்களை கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி வெட்டிக்கொள்ள வேண்டும். இவைகளை ஒரு பானையில் உப்பு போடாமல் அவித்து, ஒரு வெள்ளைத்துணியில் முறுக்கி நிழலில், 15 நாட்களுக்கு மேல் காயவைப்பார்கள். கெட்டித்தன்மை வரும்வரை இப்படி காய வைக்க வேண்டும். இந்த கருவாடுகள் 2 ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாது.. மாசி கருவாடுகளில் முட்களும் இருக்காது.. வருடக்கணக்கில் மாசிக்கருவாடுகளின் வாசம் நீடித்து கொண்டேயிருக்கும்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாசி கருவாடு தரும் நன்மைகள் ஏராளம்.. ஆண்கள் இந்த மாசி கருவாடுகளை சாப்பிட்டு வரும்போது, விந்து திரவம் அதிகரிக்கும்.. குறைவான விந்தணுக்கள் இருந்தாலும், அதை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை இந்த கருவாடுகளுக்கு உண்டு. அத்துடன் வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டமும் சீராகிவிடும். எனவேதான், புதுதம்பதிகளுக்கு இந்த கருவாடை கொடுப்பார்கள். இதனால், ரத்த ஓட்டம் போன்றவற்றை சீராக்குகிறது..
கர்ப்பிணிகள்: கருவுற்ற பெண்கள், உணவில் மாசி கருவாடு அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கருவிலுள்ள குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கருப்பையும் உறுதி பெறும்.. ஒவ்வொரு கருவாடுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும் என்றாலும், இந்த மாசி கருவாடு மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு பலப்படுத்தக்கூடியவை. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications