நற நறன்னு "பல்லு கூசுதா".. தப்பு மேல தப்பு இதுதான்.. நாலஞ்சு "இலை" மட்டும் பற்களுக்கு போதும்.. டிப்ஸ்
சென்னை: பல் கூச்சம் இருந்தால் அசால்ட்டாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள்.. ஆனால், அதுதான், மிகப்பெரிய உபாதையை கொண்டுவந்து விட்டுவிடுமாம்.
இந்த பல்கூச்சம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன.. குறிப்பாக, பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்துபோய்விடுவதால், அதன் மேற்பகுதிகளில் கூச்சம் ஏற்படும்.. சரியான முறையில் பற்களை சுத்தம் செய்யாவிட்டால் இந்த பல்கூச்சம் ஏற்படும்..

எனாமல்: பல் தேய்க்கும்போது, சரியான முறைப்படி தேய்க்க வேண்டுமாம்.. அழுத்தியும், வேகமாகவும், ஒவ்வொரு திசைகளில் தேய்ப்பது தவறு என்கிறார்கள்.. எனாமல் தேய்ந்து போக இது மிக முக்கியமாக உள்ளது.
Recommended Video
அடுத்ததாக, ஈறுகளில் பிரச்சனை இருந்தாலும் பல்கூச்சம் வர வாய்ப்புள்ளதாம்.. சிலருக்கு வைட்டமின் குறைபாடு இருந்தாலும் பற் கூச்சம் வரலாம்.. பற்களுக்கு ப்ளீச்சிங் செய்தாலும், கூச்ச உணர்வு வரலாம்.. சிலருக்கு மழைக்காலங்களில் பற்களில் கூச்சம் வரலாம்.. மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும்போது பற்களில் கூச்சம் வரும்..
புளிப்பு பொருட்கள்: புளிப்பான பொருள்களை எடுத்துகொள்ளும்போது பற்களில் கூச்சம் வரும்.. குளிர்ந்த பொருளை சாப்பிடும்போது பற்கூச்சம் வரலாம்.. சொத்தை இருக்கும்போது பற்களில் கூச்சம் வரலாம்.. இப்படி எத்தனையோ காரணங்கள் பற்களின் கூச்சத்துக்கு இருப்பதால், இதற்கெல்லாம் டாக்டரை நேரில் சந்தித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சிறந்தது.
பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல், தற்காலிக தீர்வுகளை கடைப்பிடித்தால், நாளடைவில் நிறைய பற்கள் பிரச்சனைகள் வந்துசேர்ந்துவிடும். பற்களில் எனாமல் என்பது மிகவும் முக்கியம்.. இதை பாதுகாத்தாலே, பற்கூச்சம் வராமல் தடுக்கலாம்.. தற்காலிகமாக ஒருசில வீட்டு வைத்தியங்களை செய்து கொண்டு, டாக்டரை உடனடியாக சென்று சந்தித்து விட வேண்டும்.
தேங்காய் எண்ணெய்: அந்தவகையில், தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த வலி நிவாரணி.. எனவே, தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்திருந்து, எண்ணெய் கொப்புளித்து விடவும். தினமும் காலையில் இதை செய்து வந்தால் படிப்படியாக கூச்சம் குறையும்... கொய்யா இலைகள் நான்கைந்து எடுத்து கழுவி, 2 நிமிடங்கள் பற்களில் படும்படி மென்று உமிழ வேண்டும்.. தினமும் இரண்டு முறை இப்படி மென்று சாப்பிட்டு வந்தால் ஓரளவு பலன் தரும்..
ஒரு பல் பூண்டு எடுத்து, தண்ணீரில் தொட்டு, கல்உப்பு சேர்த்து நசுக்கிவிடவேண்டும்.. இந்த கலவையை பல்லில் 15 நிமிடங்கள் வைத்திருந்து வாய் கொப்பளித்து வந்தாலும் பல் கூச்சம் குறையும். வெங்காயத்தையும் இப்படி பயன்படுத்தலாம்.. ஒரு சிறிய தண்டு எடுத்து, ஈறுகளில் படும்படி 10 நிமிடங்கள் வைத்து, துப்பிவிடலாம்.. வெதுவெதுப்பான உப்பு நீரும், கிருமிகளை அழித்துவிடுவதால், பல் கூச்சத்திலிருந்து மெல்ல, மெல்ல விடுபடலாம்.
தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில், சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து, ஈறுகளில் படுமாறு 5 நிமிடம் வைத்திருந்து, கொப்பளித்தாலும் பல்கூச்சம் குறையும்.. கிராம்பு எண்ணெய்யை ஈறுகளில் தேய்த்து வந்தாலும் தீர்வு கிடைக்கும்.. கொய்யா இலைகளை நன்றாக மென்று தின்று வரலாம்..
டாக்டர்: முக்கியமாக, பற்களை பொறுமையாக துலக்க வேண்டும்.. இதற்கென உள்ள முறையை பின்பற்றி, பிரஷ் செய்ய வேண்டும்.. புதினா கலந்த பேஸ்ட்டை பயன்படுத்தினால் நல்லது.. அமில உணவுகளை குறைத்து, சிட்ரஸ் நிறைய இருக்கும் உணவுகளை குறைத்து, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்தாலே போதும்.. எனினும் இதெல்லாம் தற்காலிகம்தானே தவிர, பல் டாக்டரிடம் நேரடியாகவே சென்று ஆலோசனை பெறுவது நல்லது.












Click it and Unblock the Notifications