இடுப்பு கொழுப்பு வேகமாக கரையணுமா? இந்த ஒரு காய் போதுமே.. இரவு உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா?
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா? இதனால் உடல் எடை குறையுமா? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர் பழங்கள் வெகுவாக கைகொடுத்து உதவுகின்றன. பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சைகள், வால்நெட் பருப்புகள் போன்றவைகளையும் காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேபோல, வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதால், கூடுதல் பலன் கிடைக்கிறதாம்.. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை வைட்டமின் C உணவுகளே நிறைய வழங்குகின்றன. உடலுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தி இந்த வைட்டமின் C சத்துக்களுக்கு அதிகமாகவே உள்ளன.
காய்கறிகள்: உடல் எடையை குறைப்பதற்கு உடலிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது கட்டாயமாகும்.. இதற்காகவே உணவில் சில காய்கறிகளை கட்டாயம் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.
இதில், குடை மிளகாய் உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.. காரணம், இந்த குடை மிளகாயில் இருக்கும் வைட்டமின் C, உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.. அதாவது, 100 கிராம் குடைமிளகாயில் 50 கலோரிகள் உள்ளதாம். எனவே, தினமும் காய்கறிகளில் குடை மிளகாய் இடம்பெறுவது அவசியம்.
முட்டைக்கோஸ்களில் ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன.. இவைகள் அனைத்துமே உடலிலிருக்கும் கழிவுகள், இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை.. நார்ச்சத்து நிறைந்த முட்டைக்கோஸ்கள், உடலிலுள்ள கொழுப்பை கரைக்க பெருமளவு துணை புரிகிறது.
கீரைகள்: கீரைகள் அனைத்துமே இரும்புச்சத்து நிறைந்தவை.. இதனுடன், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தித்திப்பு காய் என்றாலும், கேரட்டில் பீட்டா கரோட்டினும், நார்ச்சத்துகளும் அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க கேரட்கள் உதவுகின்றன.
காளான்களை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.. இடுப்பு, வயிற்றிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளையும், கலோரிகளைகளையும் கரைக்கக்கூடியது இந்த காளான்கள்.. இதை சூப்பாகவும் எடுத்து கொள்ளலாம். சூப், வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகளை சாப்பிடும்போது, முழு ஆற்றலுடன் செயல்படலாம்..
ஆப்பிள் பழம்: தினம் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால், உடல் எடையை சீராக பராமரிக்கலாம்.. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் தன்மை
காலை நேரங்களில் உடைக்காத முழுத்தானியங்களால் தயாரிக்கப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை இவைகளை சாப்பிடலாம். காரணம், இவைகளில் வைட்டமின் C நிறைய அடங்கியிருப்பதால்தான், காலை உணவுகளில் அதிகமாக சேர்த்து கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இட்லி, உப்பு என்றால், பருப்பு நிறைந்த சாம்பார் வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
இரவு உணவு: கடந்த 2021ம் ஆண்டு, ஜர்னல் நியூட்ரியண்ட்ஸில் வெளியிட்டிருந்த ஒரு ஆய்வில், இரவு உணவை தவிர்க்காதவர்களுடன் ஒப்பிடும்போது, இரவு உணவை தவிர்ப்பவர்கள் அதிக எடையை பெறுவதாக கூறியிருந்தது.. அதாவது, வெறும் வயிற்றில் தூங்குவது உடல் எடை சதவீதத்தை 6 ஆண்டு ஆய்வுக் காலத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் நிரூபணமாகியிருந்தது. எனவே, இரவில் உணவை தவிர்ப்பதை தவிர்த்துவிட்டு, தேர்ந்தெடுத்து இரவு உணவை உண்ண வேண்டும்.
இவை அனைத்தையும்விட போதுமானஅளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், தேவையற்ற பசி உணர்வையும் குறைக்கிறது.












Click it and Unblock the Notifications