தூத்துக்குடியில் விரால் மீன் துள்ளுது.. மீன்வளக் கல்லூரி தந்த ஹேப்பி நியூஸ்.. செம சான்ஸை விடாதீங்க
சென்னை: ரத்த சர்க்கரையின் அளவு உடலில் எவ்வளவு இருக்க வேண்டும்? திடீரென சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்? நீரிழிவு நோய் அதிகமாகும்போது, உடலில் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் நீரிழிவு நோய் தாக்கப்படும்.. இதில், சர்க்கரை அளவு வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரித்தால், விளைவுகளும் அதிகமாகும்.. அப்படி அதிகரித்தால், சில நேரங்களில் கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்க செய்யலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம்.

சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைந்து குளுக்கோஸ் அளவும் அதிகமாகும்.. எப்போதுமே சர்க்கரை அளவு ஒரு டெசிலிட்டருக்கு 140 மில்லிகிராம் குறைவாக இருக்க வேண்டும்.. ஒருவேளை 140 மில்லிகிராமிற்கு சற்று அதிகமாக இருந்தால் உணவு சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து எடுக்க 180 மில்லிகிராமை கடந்து சென்றால், அது சர்க்கரை அளவு ஓவராகிவிட்டது என்றே அர்த்தம்.
கண்பார்வை: அதுமட்டுமல்ல, இப்படி சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால், அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும்.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிவரும்.. கண்பார்வை மங்கலாக தெரியும்... தலைவலி, உடல் சோர்வு, அதிக பசி போன்றவையும் ஏற்படலாம்.. எனவே, இந்த அறிகுறிகள் தென்பட்டாலே, மருத்துவர்களை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
சிகிச்சையை முறையாக எடுத்து கொள்ளாமல் இருந்தால், நீரிழிவு நோய் தாக்கம் அதிகரித்துவிடும்.. இதனால் உள்ளுறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.. முக்கியமாக, ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டோ, அல்லது நாளங்கள் சுருங்கி தடிமனாகிவிடுவதால், ரத்த ஓட்டம் குறைந்தோ, பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
நரம்புகள்: அதேபோல, ரத்த சர்க்கரை அதிகமாகும்போது ஏற்படும் நரம்புகள் பாதிக்கப்படும்.. இதனால், உணர்திறன் குறைந்து, புண் ஏற்பட்டுவிடும்.. இந்த புண்கள் விரைவில் ஆறாது.. இது தொற்று பாதிப்புக்கு வித்திட்டு, ரத்தத்தில் நச்சுத்தன்மையையே ஏற்படுத்திவிடும்.
அதேபோல, ரத்தத்தில் கீட்டோன்கள் அதிகமாகும்போது, உறுப்பு செயலிழப்புகள் ஏற்படலாம்.. சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள், சிறுநீரகத்தின் நெப்ரான்கள் பாதிப்படைந்து, நாளடைவில் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும்.. இந்த தொந்தரவு வந்தால் டயாலிசிஸ் செய்தே ஆகவேண்டுமாம்.
இதய நோய்கள்: ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உயர்ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு, தமனிதடிப்பு, மாரடைப்பு, இதய தசைநோய், இதய செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்கள் தாக்கலாம். எனவே, ரத்த சர்க்கரை அளவைசரியாக பராமரிக்க, முறையாக மருந்து, சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை அளவில் சிறு மாறுதல் என்றாலும், உடனடியாக மருத்துவர்களை சென்று சந்திக்க வேண்டும்..!!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications