கோவையில் வேலியை தாண்டிய காவலர்! ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் காவலர் ஒருவர் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இப்படி நடந்துக்கொள்ளலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இப்போது இந்த சம்பவம் தான் கோவை முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 15ம் தேதி மாலை இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

Coimbatore

லிமிட்டை கிராஸ் செய்த போலீஸ்

அப்போது அந்த பக்கம் ரோந்துக்கு வந்த கோவை துடியலூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் வினோத் குமார் இதை கவனித்திருக்கிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற சம்பங்களை காவலர்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே அவர்கள் தலையிடுவார்கள். அதுதான் சரியும் கூட.. ஆனால், வெள்ளக்கிணறு சம்பவத்தில், காவலர் வினோத் தனது லிமிட்டை கிராஸ் செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் இங்க என்ன பேச்சு வேண்டி இருக்கு? என்று மிரட்டிய அவர்.. இளம்பெண்ணை மட்டும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி தனியாக அழைத்து சென்றிருக்கிறார்.

பாலியல் அத்துமீறல்

அழைத்து சென்ற இடத்தில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி.. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் அழுதுக்கொண்டே வந்து நடந்த விஷயத்தை சொல்ல.. ஆண் நண்பர், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக புகார் அனுப்பியிருக்கிறார். புகாரில், காவல் வினோத் குமார் நடந்துக்கொண்ட விதத்தை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

காவலர் கைது

இதையடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ் உயர் அதிகாரிகள், உரிய விசாரணை மேற்கொண்டு நேற்று காவலர் வினோத் குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மட்டுமல்லாது, அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டிருக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடலாமா? என பலரும் கேள்வி எழுப்பி.. உயர் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

தீர்வு என்ன?

கடற்கரையில், பூங்காக்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற சர்ச்சைகளில் தொடர்ந்து காவலர்கள் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலும் கூட.. இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததை போல தெரியவில்லை. இப்படி இருக்கையில், காவல்துறையில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+