எடப்பாடி பழனிசாமியை பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை! ஊடகங்களில் வெளியான செய்திக்கு அதிமுக மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் ஏன் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும், 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளேன் " என மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து சென்னை கட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Edappadi palanisamy

கடந்த 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இடையில் சில நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.

இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், 22 ஆம் தேதி திருப்பூர், நாமக்கல், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23 ஆம் தேதி கோவை, திண்டுக்கல், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 24 ஆம் தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும், 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இன்று நிகழ்ந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு மதுரை பகுதி செயலாளர் கந்தன் கூறினார். அப்போது கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, நான் ஏன் பதவி விலக வேண்டும், 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அது பொய்யான செய்தி என அதிமுக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டக் கழக வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், கூட்டத்திற்குள் பேசியதாக தொடர்ந்து தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதை ஏற்கனவே மறுத்து, இத்தகைய செய்திகளை வெளியிடும் முன் எங்களிடம் உண்மையைக் கேட்டறிந்து வெளியிடுமாறு வலியுறுத்தி இருந்தோம்.

இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் ஒரு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்றை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தில் கந்தன் என்ற பெயரில் எந்தப் பகுதிச் செயலாளரும் இல்லை. எனவே, இந்த பொய் செய்தியை திட்டவட்டமாக மறுப்பதுடன், ஊடகங்கள் அறம் தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்ந்து இதுபோன்று பொய் செய்திகள் வெளியிட்டால் கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+