Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாக் காபி vs கிரீன் டீ.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா? பதிலை சொன்ன பிரபல மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம்மில் பலரும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவு முறையை மாற்றி வரும் நிலையில், பலரும் தங்கள் குடிக்கும் பானங்களையும் மாற்றிக் கொள்வார்கள். அதில் பலருக்கும் ஒரு கேள்வி வரும். அதாவது பிளாக் காபி நல்லதா இல்லை கிரீன் டீ நல்லதா என்று! இதற்கான பதிலை மருத்துவரே கொடுத்துள்ளார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலகட்டத்தில் அனைவருமே ஆரோக்கியமாக வாழ அதற்கேற்ப உணவு முறைகளை மாற்றி வருகிறோம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளைப் பற்றி நாம் கூடுதல் தெரிந்து கொள்ள இந்த விழிப்புணர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவுகளைப் போலவே நாம் குடிக்கும் பானங்களும் கூட நமது உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

black coffe green tea health

எது நல்லது

நீங்கள் தினசரி காலை எடுத்துக்கொள்ளும் பானம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அல்லது பாதிக்கவும் செய்யலாம். இப்போது பலரும் உடல்நலனுக்காக கிரீன் டீ அல்லது பிளாக் காபியை குடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், உண்மையில் இந்த இரண்டினாலும் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன.. சிக்கல் என்ன. இதில் எது நமக்கு உடலுக்கு நல்லது என்பது தெரியுமா.. இது குறித்த தகவல்களை சயாத்ரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் க்ஷிதிஜ் கோத்தாரியை ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பகிர்ந்துள்ளார்.

பிளாக் காபி

பிளாக் காபி என்பது பல காலமாகவே நமது நாட்டில் இருக்கக்கூடியது தான். இடையில் அனைவருமே பால் காபியை நோக்கிச் சென்ற நிலையில், இப்போது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பலரும் மீண்டும் பிளாக் காபி பக்கம் வருகிறார்கள். இந்த பிளாக் காபி குடல் இயக்கத்திற்கு (gut motility) உதவுகிறது என்று நிபுணர் கூறினார்.

இது இரைப்பை அமிலச் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் செரிமான மண்டலம் வழியாக உணவுகள் எளிதாக நகர்கிறது. பிளாக் காபி அருந்திய பிறகு குடல் ஒழுங்குமுறை மேம்படுகிறது என்று அவர் சொல்கிறார். லேசான மலச்சிக்கல் உள்ள நோயாளிகள் பிளாக் காபி குடிக்கும்போது அது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிக்கல்

அதேநேரம், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. அதாவது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், இரைப்பைக் கோளாறு, செரிமானமின்மை அல்லது எரிச்சலூட்டும் குடல் நோய் சிக்கல் உள்ளவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தலாம். பிளாக் காபியில் உள்ள அதிகப்படியான காஃபின் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம். இதனால் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். சென்ஸிடிவ் செரிமான அமைப்பு உள்ளவர்களுக்குச் சிக்கல் அதிகமாக இருக்கும்.

கிரீன் டீ

அடுத்து கிரீன் டீ.. வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கு கிரீன் டீ பெரியளவில் உதவும். இது அழற்சி எதிர்ப்புத் தன்மையையும் கொண்டது. கிரீன் டீயில் பாலிஃபீனால்கள், குறிப்பாக எபிகல்லோகாடெசின் கேலேட் (EGCG) போன்ற கேடசின்கள் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்தக் குடல் மற்றும் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது என்கிறார்.

இதில் குறிப்பிட்ட சிக்கல்கள் இருப்பதாக எதுவும் கூறவில்லை. காபியை விட இதில் காஃபின் குறைவாக இருப்பதால், அசிடிட்டி தொடர்பான அறிகுறிகளும் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். வயிறு சென்ஸிட்விட்டி உள்ளவர்களுக்கும் கூட இது கை கொடுக்கும்.!

எது பெஸ்ட்?

இறுதியில் எது பெஸ்ட் என கேட்டால் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது... நல்ல காஃபின் சகிப்புத்தன்மை இருக்கிறது என்றால் பிளாக் காபி எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் அசிட்டி பிரச்சனை மற்றும் சென்ஸிடிவிட்டி சிக்கல் இருக்கிறது என்றால் கிரீன் டீ தான் சிறந்த ஆப்ஷன் என்கிறார். பொதுவாகப் பார்த்தோம் என்றால் கிரீன் டீ தான் ஒப்பீட்டளவில் பிளாக் காபியை காட்டிலும் உடலுக்கு நன்மை தருவதாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+