வயதானால் உங்கள் எலும்புகள் தேய காரணம் கால்சியம் குறைபாடு அல்ல! மருத்துவர் விளக்கம்
சென்னை: வயதானால் பலருக்கு எலும்புகள் தேய்ந்து நடக்க முடியாமல், நிற்க முடியாமல், உட்கார கூட முடியாத அளவுக்கு அவதிப்படுவார்கள். இந்த நிலையில் எலும்புகள் தேய கால்சியம் குறைபாடு காரணமில்லை என மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஹரிஹரன் கூறியிருப்பதாவது: வயதானால் உங்கள் எலும்புகள் தேய்வதற்குக் காரணம் கால்சியம் குறைபாடு அல்ல! - ஒரு அதிரடி உண்மை!

2016-ல் நான் பேலியோ டயட் (Paleo Diet) பரிந்துரைக்கத் தொடங்கியபோது, நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு முழுமையான ரத்தப் பரிசோதனைகளைச் செய்தேன். அப்போது ஒரு அதிர்ச்சியான உண்மையைக் கண்டறிந்தேன்: பரவலாக அனைவருக்கும் விட்டமின் டி (Vitamin D) குறைபாடு இருந்தது.
ஏன் 30ng/mL என்பது போதுமானதல்ல?
பெரும்பாலான லேப்களில் 30ng/mL என்பது 'Normal' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இது எப்படி வகுக்கப்பட்டது தெரியுமா? 30-க்குக் கீழ் சென்றால் Parathyroid (பாராதைராய்டு) ஹார்மோன் அதிகரித்து எலும்புகளை உருக்க ஆரம்பிக்கும். இதயத் துடிப்பு சீராக இருக்க ரத்தத்தில் கால்சியம் அவசியம் என்பதால், எலும்பில் இருக்கும் 5 கிலோ கால்சியத்தில் இருந்து உடல் திருட ஆரம்பிக்கிறது.
இந்த ஆபத்தைத் தவிர்க்கவே விட்டமின் டி 30 என்பது அளவுகோலாக வைக்கப்பட்டது. இது உயிர் காக்க மட்டுமே, எலும்பு உறுதிக்கு அல்ல!
கால்சியம் மாத்திரை ஒரு மாயை!
பல மருத்துவர்கள் வயதானவர்களுக்கு கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இது பெரும்பாலும் தேவையற்றது.
➤ நம் எலும்புகளில் 5 கிலோ கால்சியம் உள்ளது.
➤ இதயத் துடிப்பு மற்றும் தசைச் செயல்பாட்டிற்குத் தேவையோ வெறும் 5 கிராம் மட்டுமே!
➤ உடலில் 1000 மடங்கு கால்சியம் இருப்பு இருக்கும்போது, மாத்திரை ஏன்?
உண்மையான பிரச்சினை கால்சியம் இல்லை, அதை எலும்புக்குள் கொண்டு செல்லும் 'சாவி' (Vitamin D) தான் நம்மிடம் இல்லை!
வெள்ளைக்காரர்களும் நாமும்: ஒரு ஒப்பீடு விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது.
➊ வெள்ளையர்கள்: சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில் இருப்பதால், குறைந்த ஒளியிலும் அதிக விட்டமின் டி தயாரிக்கும் வகையில் 'வெள்ளைத் தோல்' கொண்டுள்ளனர்.
➋ நாமோ: அதிக சூரிய ஒளி உள்ள நாட்டில் இருப்பதால், நம் தோல் கருப்பாக (Melanin) உள்ளது. நமக்கு அதிக வெயில் தேவை, ஆனால் நாம் வெயிலில் செல்வதே இல்லை!
பழங்குடியினரின் ரகசியம் (Hadzabe & Maasai) இன்றும் பழமையான வாழ்க்கை முறை வாழும் ஹட்சாபே மற்றும் மசாய் பழங்குடியினருக்கு எலும்புத் தேய்மானமே இல்லை. அவர்களின் ரத்தத்தில் விட்டமின் டி அளவு 50 ng/mL-க்கு மேல் உள்ளது. அவர்கள் நம் தாத்தாக்கள் காட்டிய வழி!
எனது பரிந்துரை: நீங்கள் 100 ஆண்டு காலம் எலும்பு உறுதியுடன் வாழ வேண்டுமென்றால்:
❶ உங்கள் விட்டமின் டி அளவை 50 ng/mL-க்கு மேல் பராமரியுங்கள்.
❷ அனாவசியமாக கால்சியம் மாத்திரைகள் எடுப்பதைத் தவிருங்கள்.
❸ உணவில் உள்ள கால்சியத்தை எலும்புக்குக் கடத்த விட்டமின் டி-யைச் சரியாக வைத்திருங்கள்.
அதற்கு விட்டமின் டி 60,000u உள்ள மாத்திரையை வாரம் ஒரு நாள் எடுத்துக்கொண்டே இருங்கள்.
"நார்மல் விட்டமின் டி அளவு 50ng/mL-க்கு மேல் இருக்க வேண்டும்" என்பதை உங்கள் மருத்துவரிடம் வலியுறுத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications