குண்டு கத்திரிக்காய் சாப்பிட்டா "குண்டு" ஆவாங்களா? அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடறீங்களா? இதை படிங்க
சென்னை: தென்னிந்திய சமையலில் முக்கியத்துவம் வாய்ந்தது கத்திரிக்காய்.. சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் ஏன் அலர்ஜி ஏற்படுகிறது தெரியுமா?
கத்திரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, வைட்டமின் B6 போன்றவை அடங்கியுள்ளன. இதைத்தவிர, மாங்கனீசு, வைட்டமின்கள் A, C, B1, B2 இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

எடை குறைப்பு: உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கத்தரிக்காயை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது,
உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து வைட்டமின் சத்துக்களும் இந்த கத்தரிக்காயில் நிறைந்துள்ளன.. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.. நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
பசியின்மையை நீக்குகிறது.. உடல் சோர்வடைவதை குறைக்கிறது.. நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது..
தலைமுடி: கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.. அதனால், சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை மின்ன செய்கிறது.. தலைமுடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடியின் வளர்ச்சியும் அதிகமாகும்.. கத்திரிக்காய் காய்ச்சலை நீக்கக்கூடியது.. களைப்பை தீர்க்கக்கூடியது.. ரத்த அழுத்தத்தையும் குறைக்கக் கூடியது. இதயத்தின் பலம் அதிகரிக்கிறது.
முதல்கட்ட சிறுநீரக கற்களை கரைக்கக்கூடியது இந்த கத்தரிக்காய்.. போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இந்த காயில் நினைவாற்றல் அதிகரிக்கும்.. மூளை செல்களையும் பாதுகாக்கும். எப்போதுமே கத்தரிக்காய் பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். ஆனால், முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்கு பயன்படும்.. காரணம், இவற்றில் வைட்டமின் A அதிக அளவில் இருக்கிறது.
புற்றுநோய் வராமல் காக்கக்கூடிய இந்த காய், தக்காளிக்கு இணையானது.. இதிலுள்ள, பாலிபினால்கள் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. கட்டி வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் அது ஊக்குவிக்கிறது.
ஞாபக சக்தி திறன்: மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. கத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது.
கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
தினமும் கத்தரிக்காய் சாப்பிட்டால், உடல் வலு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்சனைகளும் சீராகிறது. அதேபோல, டைப் 2 சர்க்கரை நோயை இந்த காய் தடுக்கக்கூடியது.. ஆனால், உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்கு சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற இவர்களுக்கு அதிக நாள் ஆகும்.
ஏன் அலர்ஜி: ஆனால், இந்த அலர்ஜி ஏன் வருகிறது தெரியுமா? கத்தரிக்காயில் உள்ள புரோட்டீன்தான், இதை சாப்பிடுபவர்களுக்கு அலர்ஜியை உண்டுபண்ணுகிறது.. கத்தரிக்காயில் அதிகமான சோலனைன் மற்றும் ஹிஸ்இடமின் இருக்கிறது.. இவை ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு தொந்தரவை தருகிறது. அதனால்தான், சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டவுடன், வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, தலைசுற்றல், காய்ச்சல் என உண்டாகிறது.. மேலும் அலர்ஜியையும் சந்திக்க நேரிடுகிறது..
எனினும் கத்தரி போட்டு வெட்டி ஒதுக்கப்பட வேண்டிய உணவு கத்திரிக்காய் இல்லை.. வாரம் 3 முறையாவது சாப்பிடுவது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்லதாம்,
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications