இரவில் சரியாக தூங்கலியா? 3 நைட் ஷிப்ட் டேஞ்சர்.. இந்த நோயெல்லாம் உடலில் புகுந்து விடுமாம்.. அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு 8 மணி நேரம் தூக்கம் என்பது அனைவருக்குமே மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வரும்நிலையில், இதுகுறித்து அமெரிக்காவின் ஆய்வு ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

எப்போதுமே சீக்கிரமாக நேரத்திலேயே தூங்கி, சீக்கிரமாக எழ வேண்டும் என்பதே உண்மையான ஆரோக்கியமாக கருதப்படுகிறது.. இரவில் சீக்கிரமாக தூங்குவதாலும், அதிகாலையில் எழுந்து கொள்வதாலும், உடலில் பல்வேறு ஆச்சரிய நன்மைகள் கிடைக்கின்றன..

Can 3 night shifts can raise the risk of diabetes and Do you know link between Night Shifts and Obesity

நீண்ட நேரம்: சீக்கிரமாக இரவில் தூங்க செல்வது, உணவு செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. ஆனால், நீண்ட நேரம் கண்விழித்து, சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு , மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் எழுவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஃபின்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

37 வருடங்களாக இரவு நேரத்தில் பணியாற்றிய 23 ஆயிரம் பேரின் டேட்டாக்களை வைத்து அந்த ஆய்வு நடத்தப்பட்டது... இதில், இரவு நேரம், கண் விழிப்பவர்கள், காலை நேரத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று தனித்தனி ஆய்வுகள் நடத்தப்பட்டன.. கடந்த 2018ம் ஆண்டு இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் 8700 பேர் அடுத்த சில வருடங்களிலேயே இறந்துவிட்டார்களாம்.

கண் விழிப்பு: உயிரிழந்தவர்கள், காலையில் கண் விழிப்பவர்களா? இரவு நேரத்தில் கண் விழிப்பவர்களா ? என்று கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் கண் விழிப்பவர்கள் என்று பதிலளித்திருந்தார்களாம்.. அதாவது, காலையில் கண் விழித்து வேலை பார்ப்பவர்களை காட்டிலும் 21 சதவீதம் அதிக ஆபத்து இரவில் கண் விழிப்போரிடம் இருப்பதை அந்த ஆய்வு முடிவு கூறியது.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய பழக்கவழக்கங்களும் அவர்களது உயிரிழப்புக்கு இன்னொரு காரணம் என்கிறார்கள்.. தூங்கும் மொத்தம் நேரம், படிப்பு, இணை நோய்கள் இருப்பது, மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவையும், விரைவான உயிரிழப்புகளுக்கு காரணமாக கண்டறியப்பட்டது. ஆகியவை ஆண், பெண், வயது ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அமெரிக்கா: இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு ஆய்வு தற்போது நடத்தப்பட்டுள்ளது.. வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள், இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், மூன்று நைட் ஷிப்டு பார்ப்பதால், சர்க்கரை நோய், உடல் எடை பருமன், பிற வளர்சிதை மாற்றக்கோளாறுகள் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.. அதாவது, இரவு நேரப் பணிகளால் ரத்த குளுக்கோஸ் ஒழுங்குமுறை தொடர்பான உடலின் புரதத் தாளங்கள் செயலிழந்துவிடுமாம். இது ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் வீக்கத்தைத் தடுப்பதுடன், நாள்பட்ட வளர்சிதை மாற்ற நிலைமைகளின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்கிறது அந்த ஆய்வு

மன அழுத்தம்: இதனை விரைவில் சரிசெய்யாவிட்டால், அது நீண்டகால உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் மன அழுத்தத்திற்கு வழிவகுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், மன அழுத்தம் உட்பட உடல்நல அபாயங்களை அதிகரிக்க செய்ய, வெறும் 3 நைட் ஷிப்ட்களே போதுமானது என்று அந்த ஆய்வு கூறுகிறது.. நைட் ஷிப்ட் பார்ப்பவர்களிடையே இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களும் அதிகமாக வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உடல் எடை குறைப்பு, மற்றும் நீரிழிவினையும் கட்டுக்குள் வைப்பது அவசியமாகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+