மஞ்சள் காமாலையை அடியோடு விரட்டும் கேரட் ஜுஸ்.. கேன்சர் முதல் கல்லீரல் தொற்று வரை ஓட்டும் கேரட் சாறு
சென்னை: தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த நோய்களுக்கு கேரட் தடுப்பு மருந்தாகிறது தெரியுமா?
A, C, B3, K, B6, K1, போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் சத்துக்களும் அடங்கியிருப்பவைதான் இந்த கேரட்.. இவை தவிர, ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்துள்ளன..

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மையை தரக்கூடியது இந்த கேரட்.. மனிதர்களை பாதிக்கும் சில நோய்களை முன்கூட்டியே தடுக்கும் தன்மை இந்த கேரட்டுக்கு உண்டு..
புற்றுநோய்: குறிப்பாக, புற்றுநோய்க்கு காரணமாகும் சில தொற்றுக்களையும், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் இந்த கேரட் பெற்றிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அனைத்து வகையான புற்றுநோய் செல்களை இந்த கேரட் அழித்துவிடக்கூடியது..எனவேதான், கீமோ தெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த கேரட் ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் எடை குறையும் முயற்சிப்பவர்களுக்கு, நார்ச்சத்து நிறைந்த இந்த கேரட் மிகவும் நல்லது.. பீட்டா கரோட்டீன் இதில் நிறைந்துள்ளதால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை, எளிதாக கரைத்துவிடும்.. மேலும் குறைவான கலோரிகளே கேரட்டில் இருப்பதால், உடல் எடையை பிரதானமாக குறைக்க துணை புரிகிறது.
வைட்டமின் A: A வைட்டமின்களால், கண்களுக்கு நன்மை கிடைக்கிறது.. கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நெருங்குவதில்லை.. கண் பார்வையும் கூர்மை பெறும்..
இதிலுள்ள வைட்டமின் A மட்டுமல்ல, கேரட்டிலுள்ள C வைட்டமின் சரும சேதத்தைத் தடுக்க உதவுகிறது. கேரட்டை ஜூஸ் தயாரித்து குடிக்கும்போது, சருமம் பளபளப்பாகும்.. அழகு கூடிவிடும்.. வயதான தோற்றமும் தள்ளிப்போடப்படும்... இந்த கேரட்டிலுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டிருக்கிறது.
ரத்த நாளங்கள்: கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதயத் தசைகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதய நோய்கள் வருவது தடுத்து நிறுத்தப்படும்.. அதேபோல, கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் கேரட் ஜூஸுக்கு உண்டு. மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு பாதித்த நோயாளிகள் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் கல்லீரலை வலுப்படுத்தலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், டயட்டில் கேரட் ஜூஸை சேர்த்து கொள்ளலாம்.. மலச்சிக்கல் உள்ளவர்களும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.. எப்போதுமே கேரட்டிலுள்ள முழு சத்தும் வீணாகாமல் கிடைக்கும். அதிலும், சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் செய்து, காலையிலேயே வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டுமாம்.
கால்சியம்: இதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து குடித்தால், அன்றைய நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், குடல் புண்கள் ஏற்படாது. கேரட் ஜூஸில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஜூஸ் போல அரைத்து குழந்தைகளுக்கு தந்தால், கால்சியம் அதிகமாக உடலில் சேரும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தந்து மேம்படுத்தக்கூடியவை.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் + தேன் கலந்து சாப்பிட்டால், ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்பார்கள். இனிப்பு சுவை கொண்ட இந்த கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதுதான் ஆச்சரிய உண்மை. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. ஆனால், கேரட்டை "அளவோடு" சாப்பிட வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications