கரும்பு ஜூஸில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள்.. ஆனால், சுகர் நோயாளிகள் இதை குடிக்கலாமா!
சென்னை: இப்போது சுகர் பாதிப்பு என்பது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுகர் உள்ளவர்கள் கரும்பு ஜூஸை குடிக்கலாமா கூடாதா.. என்பதே இங்குப் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் நாம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்டுக் கொண்டிருந்த நோய்களும் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக இதில் நாம் நீரிழிவு பாதிப்பைச் சொல்லலாம். முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த நீரிழிவு பாதிப்பு என்பது இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
சுகர் பாதிப்பு: உலக அளவில் பிரேசில் தான் கரும்பை அதிகம் தயாரிக்கிறது. இருப்பினும், அவர்களைத் தாண்டி சுகர் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சுகர் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவைப் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனிடையே பெரும்பாலும் சுகர் உள்ளவர்கள் கரும்பு ஜூஸை எடுத்துக் கொள்ளலாமா என்பதே கேள்வியாக இருக்கும்.
விளையாடும் போதே அல்லது வெயிலில் வெளியே செல்லும் போது கூல் டிரிஸ் குடிப்பது கெடுதல் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அதற்கு மாற்றாக கரும்பு ஜூஸை குடிக்கலாமா என்பது சுகர் நோயாளிகளின் கேள்வியாக இருக்கிறது கரும்பு ஜூஸ் என்பது நமது குடல் ஆரோக்கியமாக இருக்கப் பயன்படும்.. கரும்பு ஜூஸில் மெக்னீசியம், பொட்டாசியம், ஐயன், பி காம்ப்ளக்ஸ், விட்டமின் என பல சத்துகள் இருக்கிறது. விளையாடும் போது இது நமக்கு அதிக எனர்ஜியை தருவதாக இருக்கிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன: சுகர் நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளலாம் என்ற போதிலும் மிதமாகவே சாப்பிட வேண்டும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில் "கரும்பு ஜூஸில் இருக்கும் சர்க்கரை காரணமாக இது உடனடியாக நமது உடலுக்கு எனெர்ஜியை தருகிறது. அதேநேரம் இது கரும்பில் இருந்து வருவதால் இதை மிகவும் அளவாகவே சாப்பிட வேண்டும். அதேநேரம் முற்றிலுமாக இதைத் தவிர்க்க வேண்டும் என்று இல்லை.
கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை நமது சிறுகுடலுக்குச் செல்லாமல் கல்லீரலில் தான் ஜீரணமாகும். எனவே கூல் டிரிங்கஸை குடிப்பதற்குப் பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் டைப் 2 சுகர் பாதிப்பு கொண்டவர்கள் இதை மேலும் கவனத்துடன் அளவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களால் கண்டிரோல் செய்ய முடியாது என நினைத்தால் கரும்பு ஜூஸுக்கு பதிலாக நேரடியாக சில துண்டு கரும்பை மென்று துப்பிவிடலாம். அதேநேரம் சுகர் இருப்போர் இதைத் தினசரி குடிப்பதும் ஆபத்தானது" என்றார்
கொட்டி கிடக்கும் சத்துகள்: அதேநேரம் சுகர் பாதிப்பு இல்லை என்றால் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிளாஸ் ஜூஸில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஐயன் சத்து இருக்கிறது. மேலும், கரும்பில் இயற்கையாகக் கிடைக்கும் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சுக்ரோஸ் அதிகமாக இருக்கிறது. கரும்பில் ஃபைபரும் இருக்கிறது. இது நமது உடலுக்கு ரொம்பவே நல்லது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications