அத்திப்பழத்தின் அத்தியாவசியம்.. கேன்சர்இ மூட்டுவலி, ஆண்மை குறைபாடுகளை அகற்றும் அதிசய அத்திப்பழங்கள்
சென்னை: அபூர்வ பழமான அத்திப்பழங்கள், மனித குலத்துக்கு தரக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த நோய்களை அத்திப்பழங்கள் போக்குகின்றன என்பதை சுருக்கமாக காண்போம்.
அத்திப்பழத்தை பொறுத்தவரை, வைட்டமின் C, A, K, E, இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும் அற்புத பழமாகும்.

உடம்பில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அத்திப்பழம் கை கொடுத்து உதவக்கூடியது.. தினமும் 5 அத்திப்பழத்தினை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில், பழத்தையும், அந்த தண்ணீரை குடித்து வந்தாலே, ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும். ரத்த உற்பத்தியும் அதிகமாகும் பெருகும்.
கால்சியம் குறைபாடுகள்: உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த தினமும் 3 அத்திப்பழங்களையாவது சாப்பிட்டு வரவேண்டும். காரணம், ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் நிறையவே அடங்கியிருக்கின்றன.. அதேபோல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த தன்மை அத்திப்பழத்துக்கு உள்ளது என்பதால், சர்க்கரை நோயாளிகள், அத்திப்பழத்தைவிட, அத்திக்காயை தேர்ந்தெடுத்து பொரியல் செய்து சாப்பிடலாம்.
கால்சியம் குறைபாடுகளை போக்கக்கூடியது அத்திப்பழம்.. உலர் அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்கின்றன.. இதனால், மூட்டு வலி, முதுகு வலி, முழங்கால் வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
எலும்புகள்: அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
வாதம், பித்தம்: உடலிலுள்ள வாதம், பித்தத்தை போக்க அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும்.. குடல் தொற்று, ஆசனவாய் வெடிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்கிறது இந்த அத்திப்பழம்.
கலோரிகள்: நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ள இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.. உடல் எடை குறைவதுடன், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் இந்த அத்திப்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நார்ச்சத்து மிகுதி என்பதால் குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு இந்த பழங்கள் பேருதவி புரிகின்றன.
சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் இந்த பழத்தில் உள்ளன. எனவே, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவிபுரிகின்றன..
இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள், அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கியிருப்பதால், இதய நோய், புற்றுநோய் போன்ற அபாயங்களை குறைக்க உதவுகின்றன. அதைவிட முக்கியமாக, இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன.
முக சுருக்கங்கள்: இந்த பழம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டுகின்றன.. இதனால் சுருக்கங்களை குறைத்து, சருமத்திற்கு பளபளப்பை அதிகப்படுத்துகின்றன.
பாலியல் நோய்களை போக்கவும், ஆண்மை குறைபாடுகளை போக்கவும் இந்த அத்திப்பழம் உதவுகிறது. உடல் பலவீனத்தை குறைத்து, நரம்புகளை பலப்படுத்த அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்..
பாலியல் குறைபாடுகள்: தினமும் இரவில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது இரவு தூங்கும் முன் பாலில் இதை கலந்து குடித்தாலும் பலன் கிடைக்குமாம். தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்திருப்பவர்களும், இரவு நேரத்தில் 2, 3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு வந்தால், பாலுணர்வு அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்..
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications