மீனில் பெஸ்ட் அயிலை.. மீனை எடுத்தால் அயிரையை விடாதீங்க.. ரத்த அழுத்தம் தொந்தரவு? அப்ப இது சூப்பர் மீன்
சென்னை: உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அதனை கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவு அவசியமாகிறது.. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியம்.
உடல் எடை அதிகரிப்பது, கொழுப்புகள் அதிகம் படிவது, மன அழுத்தத்திலேயே இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை நிறைய சாப்பிடுவது, ஒரே இடத்தில் ரோம்ப நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

இதற்கு மருத்துவர்கள் உதவியுடன் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றாலும் சிகரெட், மதுவை தவிர்ப்பது அதைவிட அவசியம். அதேபோல, உணவு முறையிலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.. அந்தவகையில், செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிட்டு வரலாம். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த கீரை துணைபுரியும். இதனால், உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவுகிறது
பூண்டு சமையல்: அதேபோல, சமையலில் நிறைய பூண்டு சேர்த்து கொள்வதும் நல்லது.. இதுவும் ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும் தன்மை கொண்டது. பழச்சாறுகள், கோதுமை புல் சாறு இதெல்லாம்கூட உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.. வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மீன் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகம் உள்ள மீன்களில் அயிலை மீன்கள் தவிர்க்க முடியாதவை. இதனால் இதய நோய்கள் வராமல், பாதுகாக்கப்படுகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதுடன், கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது..
அயிலை மீன்கள்: வைட்டமின்கள் B5, B6 பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம், நல்ல கொழுப்புகள், புரதச்சத்து இதில் உள்ளன.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக இந்த அயிலை கருதப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும். சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுக்கலாம்.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருப்பதால்தான், அயிலைக்கு எப்போதுமே டிமாண்டு இருக்கிறது.. அதனால்தான், தமிழகத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டாலும், கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறதாம்..
அயிரை மீன்கள்: அயிரை மீன்களில் கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், ரத்த நாளங்களின் செயல்பாட்டுக்கு துணைபுரிவது.. ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்க செய்கிறது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அயிரை மீனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்.. அயிரை மீனிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளையும், பற்களையும் உருவாக்குவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது..












Click it and Unblock the Notifications