நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த 2 பருப்புகள் போதுமே.. இட்லி, தோசைக்கு சத்தான சைட் டிஷ்.. சசூப்பர் புரதம்
சென்னை: சர்க்கரை நோயாளிகள், இட்லி, தோசைகள் எத்தனை சாப்பிட வேண்டும்? இதற்கு சைட் டிஷ்ஷாக எந்த உணவை தேர்ந்தெடுக்கலாம்? உளுந்து மற்றும் பாசிப்பருப்பு இரண்டுமே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பருப்புகளாக ஏன் சொல்கிறோம் தெரியுமா?
உளுத்தம் பருப்புகள் புரதம் நிறைந்தவை.. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. முக்கியமாக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள்: பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் நிலையில், இதற்கு உளுந்து பேருதவி புரிகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உளுந்து போதுமானது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தையும் சீராக்குகிறது.
இதற்கு உளுந்தங்கஞ்சி வாரம் 2 முறையாவது தயார் செய்து குடிக்கலாம்.. வழக்கமாக உளுத்தம் பருப்புடன், தேங்காய் பால், சுக்கு பொடி, நல்லெண்ணெய், துருவிய தேங்காய், அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து இந்த கஞ்சி தயாரிக்கப்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் வெல்லத்துக்கு பதிலாக வெந்தயம், உப்பு சேர்த்து தயாரித்து குடித்தால் பலன் கிடைக்கும்.
தோசை, இட்லி: அதேபோல, காலை டிபன்களில் பெரும்பாலும் இட்லிதான் பயன்படுத்தப்படுகிறது. 2 இட்லி, 2 தோசை என்பதுதான் காலையில் எடுத்து கொள்ள வேண்டுமாம். இதற்கு தேங்காய் சட்னி போன்றவற்றுக்கு பதிலாக, புரதம் நிறைந்த பருப்புகளை கொண்டு, சாம்பார் சேர்த்து கொள்ளலாம். அதுவும் பாசி பருப்பில் சாம்பார் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
உளுத்தம் பருப்பிலும் சூப்பரான சைட் டிஷ் தயார் செய்யலாம். வாணலில் எண்ணெய் ஊற்றி, உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
உளுத்தம்பருப்பு: பிறகு அதனுடன் 2 காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்க வேண்டும். மீண்டும் வாணலில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கொட்டி கலக்க வேண்டும். இட்லி தோசைக்கு ஏற்ற சத்தான சட்னி இதுவாகும்.
அல்லது சர்க்கரை நோயாளிகள் பாசிப்பருப்பில், தோசை அல்லது அடை போல செய்து சாப்பிடலாம். இதற்கு பாசிப்பருப்பை ஒரு கப் அளவு ஊறவைத்து அரைத்து அதில் வெங்காயம், தேங்காய் துருவல், தேவையான காய்கறிகள் சேர்த்து அடை போல அலலது தோசை போல செய்து சாப்பிடலாம். முழுக்க முழுக்க புரதம், நார்ச்சத்துக்கள், கனிம சத்துக்கள் நிறைந்த தோசையாக இது திகழும்.
பாசிபருப்பு: முளைகட்டிய பச்சை பயிறுகளிலும் குழம்பு செய்து சாப்பிடலாம். புரதங்களால் நிறைந்துள்ள இந்த பச்சை பயிறு, குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது... பச்சை பயிறு என்றில்லை, 50-க்கும் குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்ட எந்தவொரு உணவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. எனவே, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு இந்த இரண்டு பருப்புகளை வைத்து, இட்லி தோசைக்கு சைட் டிஷ்களை சாப்பிடலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications