Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரெல்லாம் உருளைக்கிழங்கு தொடவே கூடாது தெரியுமா? உருளைக்கிழங்கில் ஆச்சரியம் பாருங்க.. பெஸ்ட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உருளைக்கிழங்குகளை அனைவராலும் தவிர்த்துவிட முடியுமா? அப்படியென்ன சத்துக்கள் உருளையில் உள்ளன?

உருளைக்கிழங்குகளில் வைட்டமின் C, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் சத்துக்கள் நிறைந்துள்ளன.. எனினும், இதிலிருக்கும் பொட்டாசியம் சத்துக்கள்தான், இந்த கிழங்கினை தவிர்க்க முடியாமல் வைத்திருக்க செய்கிறது..

Can Diabetics take Potatoes and Best Medicinal food for Healthy Skin what are the Super Health Health Benefits of potato

சத்துக்கள்: இந்த பொட்டாசியம் சத்துக்கள், இதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் அருமருந்தாகிறது. அதாவது, ரத்த அழுத்தத்தை குறைக்க அடிப்படை காரணமாக இருப்பதே இந்த பொட்டாசியம்தான்..

உருளைக்கிழங்கில் உள்ள தோலை நீக்கிவிட்டு பலரும் சமைப்பார்கள்.. ஆனால், இந்த தோலில்தான் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. இந்த தோல்கள்தான், நம்முடைய உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேராமல் தடுக்கின்றன.. கெட்ட கொழுப்புகள் உடலில் குறைந்தாலே, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வந்துவிடும்..

அபாயம்: அப்படிப்பட்ட இதயநோய், பக்கவாதம் போன்ற அபாயங்களை நம்மிடம் நெருங்க விடாமல் இருக்க செய்வதே இந்த உருளைக்கிழங்குகள்தான். அதனால், எப்போதுமே தோலுடன் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நார்ச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்..

உருளைக்கிழங்குகள் புண்களை ஆற்றக்கூடிய தன்மை கொண்டவை., முக்கியமாக, வயிற்றுப்புண், வாய்ப்புண்கள், வயிறு தொடர்பான கோளாறுகளை உருளைக்கிழங்குகள் ஆற்றுகின்றன.. இந்த கிழங்கிலிருக்கும் மாவுச்சத்துகள், நம்முடைய அடிவயிறு, இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதை தடுத்து நிறுத்துகின்றன.. இதன்காரணமாக, அசுத்தநீர் இரைப்பை குழாய்களில் தேங்குவதும் தடுக்கப்பட்டுவிடுகிறது..

பச்சை உருளைக்கிழங்கு: சமைக்கப்படாத பச்சை உருளைக்கிழங்குகள், நம்முடைய சருமத்துக்கு அருமருந்து என்றே சொல்லாம்.. காரணம், இந்த கிழங்கில் ஏராளமானவைட்டமின் C உள்ளதால், சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.. பளபளப்பை தருகிறது.. சுருக்கங்களை போக்குகிறது.. எனவே, பச்சை உருளைக்கிழங்கை பேஸ்ட் போல அரைத்து, தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால், பருக்கள், புள்ளிகள், கருமை நிற புள்ளிகள் நீங்கிவிடும்.

இதற்கெல்லாம் காரணம், இந்த உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், நம்முடைய உடலிலுள்ள செல்கள் சிதைவடைவதை குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக உடலை மட்டுமல்ல இளமையான தோற்றத்தையும் நம்மால் பெற முடியும்

ரத்த அழுத்தம்: உருளைக்கிழங்குகளை உணவில், சேர்த்து கொள்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.. அதுபோலவே, உருளைக்கிழங்கு உண்பதால் உடலில் நேரடியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் அமெரிக்க போஸ்டான் பல்கலைக்கழகத்தை சேர்த்த "தி ஜார்ணல் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸ்" நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாம்.

அதுமட்டுமல்ல, 2ம் நிலை நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 24 சதவீதம் குறைவாக உள்ளதுடன், டிரைகிளசரைட்ஸ் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் கொழுப்பானது 26 சதவீதம் குறைவாக இருந்ததாக, அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தவகையில், ஒரு நாளைக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட கப் உருளைக்கிழங்குகளை உண்பதால் எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லையாம்.

சர்க்கரை நோயாளிகள்: எனினும், சர்க்கரை நோயாளிகள் மிக மிக குறைவான அளவிலேயே இந்த கிழங்கினை எடுத்து கொள்ள வேண்டும்.. உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்க செய்யும் என்பதால், கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அதிகமாக சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தையும் அதிகரித்துவிடும். குறிப்பாக BP நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளதால், அதிக கலோரிகளை அதிகரிக்கும்.. எனவே, இது உடல் பருமனையும் ஏற்படுத்தும். மொத்தத்தில், சர்க்கரை, கீல்வாதம் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் இந்த கிழங்கினை தவிர்க்கலாம் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மிதமான அளவு எடுத்து கொள்ளலாம்.

அபாயம்: ஆனால், முளைவிட்ட உருளைக்கிழங்குகள், பச்சை நிறமாகிவிட்ட உருளைக்கிழங்குகள், போன்றவற்றில் விஷத்தன்மை நிறைந்திருக்கும்.. எனவே, இதையெல்லாம் கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட அனைவருமே தவிர்த்துவிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+