மீன் முட்டை நல்லதா? மீனை விட சூப்பர் பலன் தரும் மீன் முட்டைகள்.. யார் யாரெல்லாம் தவிர்க்கலாம் பாருங்க
சென்னை: மீன்களை போலவே, மீன் முட்டைகளும் சத்தானதுதானா? மீன் முட்டைகளை அனைவரும் சாப்பிடலாமா? மீன் முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
மீனை விரும்பி சாப்பிடும் அளவுக்கு, மீன் தலையை அனைவருமே விரும்புவதில்லை.. பெரும்பாலானோர் தலையை வெட்டிவிட்டே, மீனை வாங்கிவிடுகிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், ஏகப்பட்ட வைட்டமின்களும், புரதங்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் மீன் முட்டைகளில் உள்ளன.

பக்கவாதம்: பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்களை குறைக்கும் தன்மை இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளுக்கு உண்டு என்பதால், மீன் முட்டைகளிலும் இந்த சத்துக்கள் உள்ளன. அதாவது கோழிமுட்டையை விட அதிகளவு ஊட்டச்சத்துக்களும், எதிர்ப்புச் சத்துக்களும் மீன் முட்டையில் இருக்கிறதாம். அதைவிட முக்கியமாக, மீனில் உள்ள சத்துக்களைவிட, மீன் முட்டையில்தான் அதிக சத்துக்கள் உள்ளதாம்.
புரோட்டீன் அதிகமாக உள்ளதால், தசைகளை பழுதுபார்த்து அவற்றின் வளர்ச்சிக்கும் உதவும்.. இதிலுள்ள வைட்டமின் D சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உதவக்கூடியது. இதிலுள்ள வைட்டமின் B12 , நரம்பு மண்டலச் செயல்பாட்டை சீராக வைப்பதுடன், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவக்கூடியது. இதிலுள்ள செலீனியம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், உடலிலுள்ள செல்கள் பழுதடைவதை தடுக்கக்கூடியது.
கண் நோய்கள்: வைட்டமின் C, E, A ,இரும்புச்சத்து, கால்சியம் சத்து என நிறைந்துள்ள இந்த மீன் முட்டைகள், ரத்த விருத்திக்கும், பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைத்து, கொழுப்பின் அளவை அதிகரிப்பதையும் இந்த முட்டைகள் கட்டுப்படுத்துகின்றன.. வைட்டமின் E உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட நோய்களும் நெருங்குவதில்லை.
கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களும் மீன் முட்டைகளை சாப்பிடலாம். கோழி முட்டையை போலவே, இதையும் பொரித்து சாப்பிடலாம். பொடிமாஸ் செய்தும் சாப்பிடலாம். ஆனால், ஒரு நாளைக்கு 30 முதல் 50 கிராம் அளவு மீன் முட்டைகளை சாப்பிட்டால் போதுமானது.. காரணம், அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இந்த மீன் முட்டைகளில் உள்ளதால், குறைத்தே சாப்பிடலாம்.
அலர்ஜி: மீன் முட்டைகள் சிலருக்கு அலர்ஜியை தரலாம்.. எனவே கடல் உணவுகளை சாப்பிடுவோருக்கு அலர்ஜி இருப்பவர்கள், இந்த மீன் முட்டைகளையும் தவிர்த்துவிடலாம். அதேபோல, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் சாப்பிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications