3 மாத சர்க்கரை அளவுகளை கொடுக்கும் HbA1c தவறான முடிவுகளை வழங்குமா? மருத்துவர் விளக்கம்
சென்னை: HbA1c தவறான முடிவுகளை வழங்குமா? என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். எச்பிஏ1சி என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து அவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: HbA1c தவறான முடிவுகளை வழங்குமா? என்பதை பார்க்கலாம். ஹெச்பி ஏ ஒன் சி (HbA1C) கடந்த மூன்று மாத காலத்தில், ரத்த க்ளூகோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன் நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது.

HbA1C எப்படி அளவீடு செய்யப்படுகிறது? நமது ரத்தத்தில்
சிவப்பணுக்கள்- 90 முதல் 120 நாட்கள் உயிர்வாழுகின்றன.
இந்த சிவப்பணுக்களுக்கு அதன் சிவப்பு நிறத்தை வழங்குவது ஹீமோகுளோபின் எனும் புரதம் ஆகும். ஹீமோகுளோபின் = ஹீம் ( இரும்பு) + குளோபின்( புரதம்) மூளைக்கு ஆக்சிஜன் தேவை.
ஆக்சிஜன் - ஒரு வாயு அதை ரத்தம் எனும் திரவத்தில் அமிழ்த்த முடியாது தானே... அதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விஷயம் தான் "ஹுமோகுளோபின்" (HEMOGLOBIN) ஆகும். ஹுமோகுளோபினில் உள்ள இரும்பு ஆக்சிஜனை ஒன்றிணைவு செய்து மூளைக்கும் இதர செல்களுக்கும் வழங்குகிறது.
ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பதற்கு நம் ரத்தத்தில் இரும்புச் சத்தும் புரதச்சத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஹீமோகுளோபினின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் - ரத்த க்ளூகோஸுடன் வினை ஏற்படுத்தி HbA1c உருவாகிறது.
இதை GLYCOSYLATED HEMOGLOBIN என்கிறோம்.
இந்த அளவு 5.6% க்கு கீழ் இருப்பது நார்மல் 5.6-6.5% என்பது நீரிழிவிற்கு முந்தைய நிலை 6.5% க்கு மேல் என்றால் நீரிழிவு என்று பொருள். இந்த HbA1c என்பதை அளக்கும் போது கடந்த மூன்று மாதங்களாக ஒருவரது ரத்தத்தில் எவ்வளவு க்ளூகோஸ் சராசரியாக இருந்தது என்பதை அறிய முடியும். இந்த ஹீமோகுளோபின் உருண்டை வடிவில் இருப்பதே நார்மல்.
அதே சமயம், பிறவி சார்ந்த மரபணுக் குறைபாடுகள் காரணமாக ஹீமோகுளோபின் அதன் சரியான வடிவத்தில் இராது. இதை "ஹுமோகுளோபினோபதிகள்" (HEMOGLOBINOPATHIES) என்று அழைக்கிறோம்.
- சிக்கிள் செல் நோய் (கதிர் அரிவாள் போன்ற வடிவத்தில் பிறை நிலவு போல இருக்கும்)
- தலாசீமியா
- சிவப்பு அணுக்கள் சிதைவினால் உண்டாகும் ரத்த சோகை (ஹீமோலைசிஸ்)
மேற்கூறிய நோய்களால், சிவப்பு அணுக்கள் / ஹீமோகுளோபின் சரியான அளவில் / சரியான வடிவத்தில் இல்லாத காரணத்தால்,
HbA1c கண்டறியப்படும் போது நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.
இது ஏற்கனவே மருத்துவர்கள் அறிந்த ஒன்று தான்.
இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையில்
சிவப்பு அணுக்கள் அளவில் சிறிதாக இருக்கும். ஹீமோகுளோபினும் அளவில் குறைவாக இருக்கும்.
எனவே, ஒருவரின் ரத்த க்ளூகோஸ் , குறைவான இடத்தில் ( சிவப்பு அணுக்கள்) அதிக அடர்த்தியில் இணைந்திருக்கும்.
எனவே, இரும்புச்சத்து குறைபாட்டு ரத்த சோகையில், அவருக்கு HbA1C அதிகமாகக் காட்டும். ஆண்களுக்கு நார்மல்
ஹீமோகுளோபின் - 14 mg/dl
பெண்களுக்கு நார்மல்
ஹீமோகுளோபின்- 12 mg/dl
என்றால் அதில் இருந்து குறைபாடு இருப்பவர்களுக்கு
ஒவ்வொரு கிராம் ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கும் 0.1 முதல் 0.4% கூடும் வாய்ப்பு உள்ளது.
சாதாரண இரத்த சோகையில் ( Mild anemia) HbA1c இல் பெரிய மாற்றங்கள் இருப்பதில்லை. மிதமான மற்றும் தீவிர ரத்த சைகையில் Hba1c கூட்டிக் காட்டுவது இயல்பு. இதுவே, ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் ஏற்படும் மரபணு சார்ந்த மாற்றங்கள் மற்றும் சிவப்பணுச் சிதைவு சார்த்த ரத்த சோகைகளில், சிவப்பணுக்களின் சிதைவு காரணமாக, HbA1c குறைத்துக் காட்டும். இவையன்றி, கர்ப்ப காலத்தில், சிவப்பணுக்கள் அதிகமாக உண்டாகும் பாலிசைத்தீமியா ஆகிய நிலைகளில் Hba1c கூட்டிக் காட்டும்.
சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு, G6PD நொதிக் குறைபாடு இருப்பவர்களுக்கு, முதியவர்களுக்கு, விட்டமின் சி அதிகமாக உட்கொள்பவர்களுக்கு, தீவிர கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு, உடல் பருமன் மிக அதிகமாக இருப்பவர்களுக்கு
அவர்களது Hba1c ஐ விட குறைத்துக் காட்டும்.
இவையனைத்தும் மருத்துவர்கள் தங்களது மருத்துவப் படிப்பில் பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். இதற்கு சரி செய்யும் முறையும் உண்டு. உதாரணம் , இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை இருப்பவர்களுக்கு உதாரணம் ஒரு பெண்ணிற்கு hemoglobin - 10g/dl HbA1c - 9% என்று வந்தால் பெண்களுக்கான நார்மல் Hb இல் இருந்து 2 g குறைந்துள்ளது என்றால், கிராமிற்கு 0.4% என்று கணக்கில் கொண்டு 0.8% குறைத்துக் கொள்ள வேண்டும். அவரது சரியான Hba1c 8.2% ஆகும்.
இதுவே, ஒருவருக்கு அணுச் சிதைவு சார்ந்த நோய் இருப்பவர்களுக்கு Hba1c தவிர்த்து விட்டு ஃப்ரக்டோசமின் பரிசோதனை செய்யலாம். அல்லது அவர்களுக்கான கரெக்சன் கண்டறிவது பின்வரும் விஷயத்தை பின்பற்றலாம். தலாசீமியா இருக்கும் நீரிழிவு நோயருக்கு Hb - 7 g/dl என்றால் அவரது Hba1c 5 என்று வந்தால் கீழ்காணும் பார்முலா உதவும் சரியான Hba1c = நோயருக்கு வந்த HbA1c + ( 15 - Hb in g/dl) × 0.4
= 5 + ( 15 - 7) × 0.4
= 5 + (8×0.4)
= 5+ 3.2
= 8.2%
அவரது சரியான Hba1c 8.2% என்று கொள்ளலாம்.
இந்த Hba1c ஐ தனியாக அணுகாமல், கூடவே காலை வெறும் வயிற்றில் சுகர், உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரம் கழித்து சுகர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் Hba1c ஒருவருக்கு குறைந்திருந்து இந்த காலை வெறும் வயிற்று மற்றும் சாப்பிட்ட பின் சுகர் அதிகமாக இருப்பின் அவருக்கு ஹுமோகுளோபின் சார்ந்த மரபணு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியலாம்.
இதனுடன், ஆறு புள்ளி பரிசோதனையும் உள்ளது
1 காலை வெறும் வயிற்றில் ( Fasting)
2.காலை உணவுக்குப் பிறகு இரண்டு மணிநேரம் + (PPBS)
3.மதிய உணவுக்கு முன் ( PRE LUNCH)
4.மதிய உணவுக்குப் பிறகு ( POST LUNCH)
5.இரவு உணவுக்கு முன் ( PRE DINNER)
6.இரவு உணவுக்குப் பின் ( POST DINNER)
இந்த ஆறு புள்ளி பரிசோதனையை,
வாரம் இரண்டு நாட்கள் எடுத்தால் போதும்.
HbA1c + Fasting + PPBS முடிந்தால்
6 point test ( வாரம் இரண்டு நாள் மட்டும்) சேர்க்கும் போது
நமக்கு இன்னும் சிறப்பான அளவில் ஒருவரின் சுகர் குறித்து அறிய முடியும்.
தலாசீமியா, சிக்கிள் செல் டிசீஸ் ஆகியன சமூகத்தில் 0.37% மற்றும் 1.17% என்ற அளவிலேயே இருக்கின்றன. இந்த மரபணுக்குறைபாடுகள், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினங்களில் அதிகம் காணப்படுகின்றன.
பொது சமூகத்தில் இதன் இருப்பு குறைவு. G6PD குறைபாடு 63 இல் ஒருவர் கேரியராக இருக்கிறார். சமூகத்தில் சராசரியாக 8.5% பேருக்கு இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அவர்களது சிவப்பணுக்களும், ஹீமோகுளோபினும் நல்ல நிலையில் இருப்பதால் நாம் தொடர்ந்து Hba1c பரிசோதனையை அதன் சாதக பாதகங்கள் அறிந்து எடுத்து உபயோகிக்க வேண்டும்.
எந்தப் பரிசோதனைக்கும் சாதக பாதகமான அம்சங்கள் இருக்கும். அதைப் பகுத்தறிந்து உபயோகிக்கும் திறன் மருத்துவர்களுக்கு உண்டு. Hba1cஐ ஒதுக்க வேண்டியதில்லை. இப்போது தான் எளியோருக்கும் சிறு குறு நகரங்களுக்கும் Hba1c சாமானியரும் உபயோகிக்கும் விலையில் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.
இந்தப் பரிசோதனையை High performance Liquid chromatography முறையில் செய்யும் போது பிழைகள் நடப்பது குறைக்கப்படுகிறது. இயன்றவரை அனைத்து லேப்களிலும் இந்த முறையில் Hba1c எடுத்தால் துல்லியமான முடிவுகள் கிடைக்கும். அதை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
1976 இல் Hba1c கண்டறியப்பட்டது 2010 க்குப் பிறகே அது நீரிழிவு கண்டறியப்படுதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது இன்று 2026 இல் பெரு நகரங்கள் சிறு நகரங்கள் என பரவலாக எளிமையாகக் கிடைக்கிறது. இது கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும்.
ஏழை எளியோரும் பயன்படுத்தும் பரிசோதனையாக வர வேண்டும். அதன் சாதகங்கள் மற்றும் அதில் இருக்கும் சூட்சுமங்கள் அறிந்து சரியான முறையில் அதைத் தொடர்ந்து உபயோகிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications