குதிரைவாலி அரிசி பெஸ்ட்.. மளமளன்னு வெயிட் குறைக்க உதவும் குதிரை வாலி.. கருப்பு கவுனி கூடவா? சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால் அரிசியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், குதிரைவாலி அரிசி அப்படியில்லை.. மூங்கில் அரிசியை போலவே பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது குதிரைவாலி அரிசி.

குதிரைவாலி அரிசியில், வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்றவை உள்ளன. அத்துடன், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், B கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களும் நிறைந்திருப்பதால்தான், உணவுப்பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

Can Heart Patients take Kuthiraivali Rice and what are the Best Rice to reduce our Body Weight

குதிரைவாலி அரிசியை பொறுத்தவரை, கோதுமையைவிட அதிக சத்துக்களை கொண்டது.. அதாவது கோதுமையிலிருக்கும் நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலியில் உள்ளது.

நார்ச்சத்து: இந்த அரிசியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், 25 கிராம் அரிசியை சமைத்தால், 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம்.. அத்துடன், 65 கலோரிகள் வரை கிடைப்பதுடன், அபரிமிதமான நார்ச்சத்துக்களும் கிடைக்கும். 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் முதல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய லிஸ்ட்டில் இந்த குதிரை வாலி உள்ளது.

மிகக்குறைந்த அளவே கலோரிகள் உள்ளதாலும், மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கப்பதாலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக இந்த அரிசியை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், உடலில் நச்சுக்கள், உப்புக்களையும் வெளியேற்றும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது.

குளுக்கோஸ்: கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் அளவையும் மெதுவாக வெளியிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது.. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அரிசியை எடுத்துக் கொண்டால், அனீமியா பிரச்சனை தீரும்.. அடிக்கடி குதிரை வாலி அரிசியை சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நெருங்குவதில்லை.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு இந்த அரிசியை பயன்படுத்தலாம். இதனால், தசைகள், எலும்புகள் வலுவாகும்.. ஆனால், இந்த அரிசியை நன்றாக ஊறவைத்து, வேகவைத்து சமைக்க வேண்டும்.

கருப்பு கவுனி: இதுபோலவே, கருப்பு கவுனி அரிசியையும் பயன்படுத்தலாம்.. நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும், இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பும் இந்த அரிசியில் உள்ளதுடன், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன.

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கும் கருப்பு கவுனி அரிசி சிறந்தது.. வாயு கோளாறு, செரிமான பிரச்சனையை தீர்ப்பதால், கல்லீரல் ஆரோக்கியம் பெற இந்த அரிசி உதவுகிறது. இதில், நார்ச்சத்து மட்டுமே அதிகம் என்பதால், கொஞ்சம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிவிடும் உணர்வு கிடைத்துவிடும்.

பெஸ்ட் சாய்ஸ்: இதேபோல, மூங்கில் அரிசியும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் அதிகமாகவும், கொழுப்பு சத்து அவ்வளவாக இல்லாததாகவும் இந்த அரிசி திகழ்வதால், உடல் எடையை குறைப்போரின் பெஸ்ட் சாய்ஸாக இது உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+